“உலக கோப்பைல எங்க ஆளுங்க தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கறாங்க!” – வாசிம் அக்ரம் ஒப்புதல் வாக்குமூலம்!

0
3860
Akram

தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் மிகவும் பெரிய வெற்றியடைந்த உலகக்கோப்பை தொடராக மாறி இருக்கிறது.

நடப்பு உலகக் கோப்பை தொடர் மைதானத்திற்கு ரசிகர்களை கொண்டு வந்தது, தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாரியாக அதிக ரசிகர்கள் பார்த்தது, மேலும் அதிகப்படியான வருமானத்தை எல்லா வகையிலும் உருவாக்கியது என பல சாதனைகளை படைத்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பாக மழை குறித்தும், சில வெளிக் காரணங்களாலும் நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தது. உலகக் கோப்பையின் துவக்கமும் மிகவும் மந்தமாக இருப்பதாகவே தெரிந்தது.

ஆனால் உலக கோப்பையின் துவக்க போட்டிக்கு 30,000 மேற்பட்ட ரசிகர்கள் வந்திருந்தது பின்பு தெரிய வந்தது. இப்படி ஒவ்வொரு நாளாக நடப்பு உலக கோப்பைக்கு வரவேற்பு அதிகரித்து, ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து போன்ற சிறிய அணிகளும், தொடரை நடத்தும் உள்நாட்டு அணியான இந்தியா பெரிய வெற்றிகளையும் தொடர்ந்து பெற, உலகக் கோப்பைத் தொடர் பெரிய அளவில் பரபரப்பு அடைந்து விட்டது.

இந்த நிலையில் நன்றாக சென்று கொண்டிருக்கும் உலகக்கோப்பையில் டிஆர்எஸ் விதி குறித்து நிறைய சர்ச்சைகள் வெளியில் இருந்து பேசப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து நிறைய விமர்சனங்கள் முன்னால் வீரர்கள் இடம் இருந்து வருகிறது.

- Advertisement -

இதுகுறித்து வாசிம் அக்ரம் கருத்து கூறும் பொழுது “டிஆர்எஸ் என்பது முழு அளவில் துள்ளியம் கிடையாது. சில மோசமான முடிவுகள் வந்திருக்கிறது. ஆனால் அது விளையாடும் இரண்டு அணிகளுக்குமே பொதுவானதாகத்தான் இருந்திருக்கிறது. எல்லா கிரிக்கெட் வாரியங்களும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஒப்புக்கொண்டு இருக்கின்றன. ஆனால் இது குறித்து உருவாக்கப்படும் சர்ச்சைகள் எங்களுடைய சொந்த சகோதரர்களால் செய்யப்படுகின்றன!” என்று கூறியிருக்கிறார்!

இதே விதி குறித்து மிஸ்பா உல் ஹக் கூறும் பொழுது “இந்த விதி மனிதர்கள் செய்யும் தவறை குறைத்துள்ளது. கள நடுவர்கள் செய்யும் தவறை குறைப்பதற்காக இது கொண்டுவரப்பட்டது. மேலும் நடுவர்கள் எடுக்கும் தவறான முடிவுகள் இதன் மூலம் குறைக்கப்பட்டு இருக்கிறது!” என்று கூறி இருக்கிறார்!