ஐபிஎல் 2025

ஸ்ரேயாஸ் ஐயர் என் மகன் யுவராஜ் சிங் ஆயிட முடியாது.. இங்க ரெண்டே பேர்தான் மாஸ் – யோக்ராஜ் சிங் பேச்சு

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிகள் வெற்றி வாய்ப்பை இழந்த பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்பு இறுதிப்போட்டி முடிந்ததுமே ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடிய விதம் கிரிமினல் குற்றம் என்றும், இதற்காக அவரை இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கலாம் எனவும் மிகவும் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருந்தால் என்பது குறிப்பிடத்தக்கது.

வெல்ல வேண்டிய போட்டி

இந்த குறிப்பிட்ட இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணி 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில், பஞ்சாப் கிங் அணியால் இதை சுலபமாக எடுத்திருக்க முடியும் எனவும், அணியின் மிக முக்கியமான வீரரான ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பில்லாத ஒரு ஷாட் விளையாடியதின் காரணமாகவே அந்த அணி தோற்று விட்டதாக கூறியிருக்கிறார்.

இந்தளவிற்கு இவர் மிகக் கடுமையாக ஸ்ரேயாஸ் ஐயரை விமர்சிப்பதற்கான காரணம் என்னவென்றால் இவருடைய சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். எனவே பஞ்சாப் அணி வெல்ல வேண்டிய போட்டியை ஸ்ரேயாஸ் ஐயர் தோற்க வைத்து விட்டார் என்று இவர் விமர்சனம் செய்து வருகிறார்.

- Advertisement -

இவர்கள் இருவர்தான்

இதுகுறித்து யோக்ராஜ் சிங் கூறும் பொழுது ” பலவீரர்கள் இருந்தாலும் இந்தியாவிற்கும் மிகச் சிறந்த பினிஷர்கள் யுவராஜ் சிங் மற்றும் தோனி மட்டும்தான். இருவரும் சேர்ந்து இந்திய அணி தோல்வி அடையும் நிலையில் இருந்த 92 போட்டிகளை வென்று கொடுத்து இருக்கிறார்கள். யுவராஜ் சிங்குக்கு 98 சதவீதம் வெற்றி இருக்கிறது. 72 போட்டிகளில் அவர் தனி ஒருவராக வெற்றி பெற்று இருக்கிறார். நடந்து முடிந்த இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணிக்கு பெரிய வீரரான விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார்”

இதையும் படிங்க : கோலிக்கு பணம் கோடில கொட்டுது பேசுவாரு.. ஆனா வெஸ்ட் இண்டீஸ் நிலைம அப்படி கிடையாது – ரசல் பேச்சு

“இந்த இறுதி போட்டியில் ஒரே ஒரு குற்றவாளிதான் இருக்கிறார் அவர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். இங்கு கிரிக்கெட்டை விட யாரும் பெரியவர்கள் கிடையாது. நீங்கள் உங்களை கிரிக்கெட்டை விட பெரிய ஆளாக நினைக்கும் பொழுது இப்படியான விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts