இந்திய கிரிக்கெட்

இந்தியா அயர்லாந்து கிட்ட கேவலமா தோக்கலையா?.. கிரிக்கெட் என்ன அழிஞ்சு போயிடுச்சா – பாக் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சு

​பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசியுள்ளார்.

- Advertisement -

​சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமாகத் தோல்வியடைந்தது. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகம், ஏழு முன்னணி வீரர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பியதுடன், பயிற்சியாளர் சர்பராஸ் அகமது உள்ளிட்டோரையும் அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.

​அணியின் தற்போதைய பின்னடைவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி பேசும்போது “தென்னாப்பிரிக்கா அணி நமீபியாவிடமும், இந்தியா அயர்லாந்திடம் தோற்கவில்லையா, அதனால் கிரிக்கெட் அழிந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பிய அவர், ஃபார்மில் இல்லாத வீரர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதே முதன்மை நோக்கம்” எனக் கூறி இருக்கிறார்.

​மேலும் தொடர்ந்து பேசிய அவர் “முன்பை விட ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் பாகிஸ்தான் அணி முன்னேற்றம் கண்டுள்ளது. டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளைச் சரிசெய்து விரைவில் அணி மீண்டு வரும், விமர்சனங்களைக் கண்டு அஞ்சப் போவதில்லை” எனக் கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by