இந்தியாவில் அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்த முறை ஐபிஎல் தொடரில் 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசுவாரா என்பது குறித்து லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேசியிருக்கிறார்.
மயங்க் யாதவ் தன்னுடைய முதல் ஐபிஎல் பின்சனில் 150 க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி இந்தியாவின் அதிவேக பந்து வீச்சாளராக அறியப்பட்டார். ஆனால் அடுத்தடுத்த தொடர் காயங்களால் அவர் இரண்டு வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை.
மயங்க் யாதவ் செய்வாரா?
கடந்த ஆண்டு ஒரு சில போட்டிகளில் களம் இறங்கிய அவரால் முழு வேகத்தில் பந்து வீச முடியவில்லை. 135 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே அவர் பந்து வீசினார். இதன் காரணமாக அவர் மிக எளிதாக பேட்ஸ்மேன்களால் அடிக்கவும் பட்டார்.
இதுகுறித்து பவுலிங் கோச் பரத் அருண் பேசும் பொழுது “மயங்க் யாதவ் இரண்டு வருடங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார். எனவே அவரால் எடுத்தவுடன் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு செல்ல முடியாது. தற்போது அவர் 140 கிலோ மீட்டர் வேகத்தை தொட்டு அருகில் வீசுகிறார். இது ஆரோக்கியமான வேகம்தான். படிப்படியாக அவர் பந்து வீசும் போது தன்னம்பிக்கை பெற்று 150 கிலோமீட்டர் வேகத்தை அடைந்து விடுவார்”
எனக்கு இந்த சவால் இருக்கிறது
“எனக்கு கேகேஆர் அணியில் இருந்த பொறுப்பை விட இங்கு மிகவும் அதிகமான பொறுப்பு உள்ளது. இந்த லக்னோ அணியில் அரை டஜனுக்கும் மேற்பட்ட இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் உள்ளார்கள். இவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்காக விளையாட முடியும். இவர்களை சிறப்பாக வழி நடத்தி முழு திறனை அடைய வைப்பது எனக்கு சவால் ஆனது. எனக்கு சவால்கள் என்றால் பிடிக்கும்”
இதையும் படிங்க : சிஎஸ்கேவுக்கு ஓபனர்கள் யார்?.. மறைக்காமல் உண்மையை சொன்ன ருதுராஜ் – ரசிகர்கள் பெரிய மகிழ்ச்சி
“எங்கள் அணியில் முகமது ஷமி சிறந்த அனுபவத்தை கொண்டு வருகிறார். மேலும் ஆவேஷ் கான் மற்றும் பிரின்ஸ் யாதவ் இருவரும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். நமன் திவாரி மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் அணியில் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். அணியின் விருப்பத்திற்கு ஏற்ப இவர்களை ஒருங்கிணைத்து, இவர்களின் சிறந்ததை கொண்டு வருவதுதான் பெரிய சவால்” என்று கூறியிருக்கிறார்.






