என் மகன் யுவராஜ் சிங் வாழ்க்கையை கெடுத்த.. தோனியை மன்னிக்க மாட்டேன்.. கண்ணாடில பாரு – யோக்ராஜ் சிங் பேட்டி

0
713
Dhoni

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை மகேந்திர சிங் தோனிதான் கெடுத்து முடித்து விட்டதாக, அவருடைய தந்தை யோக்ராஜ் சிங் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்து பேசியிருக்கிறார்.

தோனி மீது இத்தகைய குற்றச்சாட்டுகளை யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் அடிக்கடி கூறி வருவது வழக்கம். இந்த நிலையில் தோனி தன் மகனுக்கு எதிராக செய்த விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு தற்போது தெரியவந்து கொண்டிருப்பதாக அவர் கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

- Advertisement -

நாயகன் யுவராஜ் சிங்

இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை தொடரை வென்றதற்கு மிக முக்கிய காரணமாக யுவராஜ் சிங் இருந்தார். அவருடைய செயல்பாட்டை கழித்து விட்டால் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு 100% வாய்ப்பு கிடையாது என்று கூறலாம்.

அதே சமயத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய பிறகு அந்த வாய்ப்பு யுவராஜ் சிங்குக்கு கிடைக்க இருந்தது உண்மை. அந்த சமயத்தில் வீரேந்திர சேவாக்கும் போட்டியில் இருந்தார். எனவே அணிக்குள் எந்த பிளவும் வரக்கூடாது என புதிய வீரரான மகேந்திர சிங் தோனியை சச்சின் புதிய கேப்டனாக வருவதற்கு ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோனி குறித்து யுவராஜ் சிங் இதுவரையில் எந்த குற்றச்சாட்டும் கூறியதும் கிடையாது.

- Advertisement -

தோனியை மன்னிக்க மாட்டேன்

இப்படியான நிலையில் மகேந்திர சிங் தோனி குறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் “தோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவரது முகத்தை அவரே கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் என் மகனுக்கு எதிராக அவர் செய்தது எல்லாம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து கொண்டிருக்கிறது. இதை என்னுடைய வாழ்நாளில் மன்னிக்க முடியாது.

வாழ்நாளில் நான் இரண்டு தவறுகள் செய்தது கிடையாது. தப்பு செய்த யாரையும் மன்னித்தது இல்லை. இன்னொன்று தப்பு செய்தது என்னுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளாக இருந்தாலும் கூட நான் அவர்களை கட்டிப்பிடித்ததில்லை.

இதையும் படிங்க : 550 ரன்னுக்கு போராடி.. ரகானே இங்கிலாந்தில் அபார சதம்.. ஆஸி தொடருக்கு ரோகித் கம்பீர் கவனிப்பார்களா?

இன்னும் நான்கு ஐந்து ஆண்டுகள் விளையாடியிருக்க வேண்டிய என்னுடைய மகன் யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையை அந்த மனிதர் தோனி கெடுத்து முன்கூட்டியே முடித்துவிட்டார். யுவராஜ் போன்ற ஒரு மகனை அனைவரும் பெற்று எடுக்க வேண்டும். இன்னொரு யுவராஜ் சிங் கிடைக்க மாட்டார் என ஷேவாக் மற்றும் கம்பீர் பேசி இருக்கிறார்கள். புற்றுநோய் உடன் போராடி உலகக் கோப்பையை வென்றதற்காக என்னுடைய மகன் யுவராஜ் சிங்குக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -