550 ரன்னுக்கு போராடி.. ரகானே இங்கிலாந்தில் அபார சதம்.. ஆஸி தொடருக்கு ரோகித் கம்பீர் கவனிப்பார்களா?

0
2367
Rahane

தற்போது இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் செகண்ட் டிவிஷன் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்திய வீரர் ரகானே இக்கட்டான நிலையில் சதம் அடித்து தன் அணி முன்னிலை பெற உதவியிருக்கிறார்.

தற்போது ரகானே இங்கிலாந்து கமிட்டி அணியான லீசெஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் கிளாமோர்கன் அணிக்கு எதிரான போட்டியில் ரகானே அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்தது.

- Advertisement -

கிளாமோர்கன் அணி அதிரடி

முதலில் பேட்டிங் செய்த லீசெஸ்டர்ஷைர் அணிக்கு முதல் இன்னிங்ஸில் ரகானே 42, ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேண்ட்ஸ்ஹாம் 46 ரன்கள் தாக்குப்பிடித்து எடுத்தார்கள். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 251 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய கிளாமோர்கன் அணி 9 விக்கெட் இழப்புக்கு 550 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் காலின் இங்க்ரம் அதிரடியாக 375 பந்துகளில் 28 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 257 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

இந்திய ஆஸ்திரேலிய ஜோடி

இந்த நிலையில் 299 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய லீசெஸ்டர்ஷைர் அணிக்கு இந்த முறையும் இந்தியாவின் ரகானே மற்றும் ஆஸ்திரேலியாவின் பீட்டர் ஹேன்ட்ஸ்ஹாம் ஜோடியே பொறுப்பாக விளையாடி முன்னிலை பெறுவதற்கு உதவியது.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் இந்திய வீரர் ரகானே 192 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 102 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா வீரர் பீட்டர் ஹேன்ட்ஸ்ஹாம் 190 பந்துகளில் 14 பவுண்டரி உடன் 107 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார். தற்போது லீசெஸ்டர்ஷைர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலையும் பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க : 26/6 சரிந்த பங்களாதேஷ்.. கோல்டன் வாய்ப்பை வீணடித்த பாகிஸ்தான் அணி.. லிட்டன் தாஸ் மெகதி ஹசன் அசத்தல்

ரகானேவின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சதம் அடிப்பதை அவர் வாடிக்கையாக வைத்திருந்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் யூனிட்டின் லோயர் மிடில் ஆர்டர் அனுபவமற்றதாக இருக்கிறது. கேஎல் ராகுல் அடிக்கடி காயமடைய கூடியவராக இருக்கிறார். எனவே வருகின்ற ஆஸ்திரேலிய தொடருக்கு தற்போது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ரகானேவை இந்தியத் தேர்வுக்குழு பரிசீலிக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -