இன்னும் 76 ரன்கள்.. ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் 2 மெகா சாதனைகள்.. பொறுப்பின் சிகரமான பேட்டிங்

0
182
Jaiswal

தற்போது நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். மேற்கொண்டு அவர் 76 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுக்கும் பொழுது இரண்டு பெரிய சாதனைகள் அவருக்காக காத்திருக்கிறது.

இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் காட்டிய பேட்டிங் அணுகுமுறை கிரிக்கெட் வல்லுனர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க அவர் பெரும்பான்மையான பந்துகளை மிகச் சரியாகக் கணித்து விக்கெட் கீப்பரிடம் விட்டுவிட்டார். ஒரு பந்துக்கு கூட தேவையில்லாமல் பேட்டை நீட்டவே இல்லை. அவருடைய பொறுப்பான பேட்டிங் டெக்னிக் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.

- Advertisement -

ஜெயஸ்வால் காட்டிய பேட்டிங் புத்திசாலித்தனம்

பங்களாதேஷ் அணியில் 6.2 அடி உயரமுள்ள மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் திறமை படைத்த வேகப்பந்துவீச்சாளர் நாகித் ராணா மீது நிறைய பேர் கவனம் வைத்திருந்தார்கள். இன்று அவர் ஜெய்ஸ்வாலுக்கு அதிபயங்கரமான பவுன்சர்களை வீசினார்.

ஒரு குறிப்பிட்ட ஓவரில் இரண்டு பவுன்சர்களை தொடர்ந்து அவர் வீச அந்த பவுன்சர்களை எதுவும் செய்யாமல் ஜெயிஸ்வால் விட்டுவிட்டார். உடனே அடுத்த பந்தை மேல் நோக்கி வீசி டிரைவ் அடிப்பதற்கு ஜெய்ஸ்வாலை அவர் தூண்டினார். ஆனால் ஜெய்ஸ்வால் மிகவும் கட்டுப்பாடோடு பவுண்டரிக்கு ஆசைப்படாமல் அந்த பந்தை விட்டு அமைதி காத்தார். மேலும் இந்த போட்டியில் 118 பந்துகள் சந்தித்து 56 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் இரண்டு சாதனைகள்

ஜெய்ஸ்வால் அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கொண்டு 76 ரன்கள் எடுத்தார் என்றால் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் 1160 ரன்கள் எடுத்திருப்பார். இதன் மூலம் 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ரகானே 1159 ரன்கள் எடுத்திருந்த சாதனையை இந்திய வீரராக முறியடிப்பார்.

இதையும் படிங்க : இன்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா ODI.. எந்த சேனலில் பார்ப்பது மற்றும் தொடங்கும் நேரம்.. முழு தகவல்கள்

மேலும் 2019-21 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் ரகானே மற்றும் புஜாரா இருவரும் 50க்கும் மேற்பட்ட ரன்களை 9 முறை அடித்திருந்தார்கள். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் அரை சதம் அடித்தால் இந்த சாதனையையும் முறியடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -