ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில் டி20 தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடுவதற்கு இரண்டு அணிகளும் தயாராக இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் இந்தத் தொடர் நடைபெறுகிற தேதி மற்றும் தொலைக்காட்சி உரிமம் உள்ளிட்ட தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.
சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முன்னணி அணிகளான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய டி20 தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்று இருந்த நிலையில் மூன்றாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட தொடர் டிராவில் முடிந்தது. இந்த சூழ்நிலையில் தற்போது இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடர் நடைபெற இருக்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் மோதிக் கொள்ளும் ஒரு நாள் தொடர் இதுவே ஆகும். இந்த சூழ்நிலையில் முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை 5 மணிக்கு நாட்டிங்காமில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி வருகிற 21ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டி 24ஆம் தேதி ஜெஸ்டர் லி ஸ்ட்ரீட்டிலும், நான்காவது ஒருநாள் போட்டி 27 ஆம் தேதி லண்டனிலும், கடைசி ஒரு நாள் போட்டி 29 ஆம் தேதி பிரிஸ்டாடிலும் நடைபெற உள்ளது.
இந்த ஒருநாள் தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஹாரி புரூக் கேப்டனாக பதவி வகிக்கிறார். கடந்த டி20 தொடரில் காயம் காரணமாக விளையாடாத ஜாஸ் பட்லர் இந்த தொடரிலும் விளையாடவில்லை. எனவே சில அனுபவ வீரர்கள் மற்றும் சொந்த நாட்டின் சூழ்நிலை மற்றும் நல்ல பந்துவீச்சை நம்பியே இங்கிலாந்து அணி களமிறங்குகிறது. மிச்சல் மார்ஸ் தலைமையில் ஆன ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும் லபுசான் மற்றும் ஸ்மித் போன்ற அனுபவ வீரர்களும் உள்ளனர்.
இந்தப் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் 5 மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் ஹெச்டி 5 இரு சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சோனி லைவ் ஆப்பில் இந்த போட்டிகளை கண்டு களிக்கலாம். அதுமட்டுமல்லாமல் இணையதளத்தில் ஃபேன் கோட் ஆப் மூலமாகவும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரை காணலாம்.
இதையும் படிங்க:விராட் கோலியை இப்படித்தான் தூக்கினோம்.. எங்க அனலைசர் ஒரு மேஜிக் மேன் – தமிம் இக்பால் வர்ணனையில் பேச்சு
ஏற்கனவே இந்த இரண்டு அணிகளுக்கு இடையே உள்ள டி20 தொடர் டிராவில் முடிவடைந்துள்ள நிலையில், ஒரு நாள் தொடரை கைப்பற்ற இரண்டு அணிகளும் போட்டி போடும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.