இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது இங்கிலாந்தில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது.
இந்தத் தொடரானது இரண்டு நாட்டு அணிகளுக்கு இடையேயும் மிக முக்கிய தொடராக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்
இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா என்ற இரு ஜாம்பவான்கள் டெஸ்ட் பார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணி விளையாடுகிற முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். இன்றைய டெஸ்ட் தொடர் வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளதால் சுப்மான் கில் தலைமையிலான இந்திய அணி மிகுந்த கவனத்தோடு விளையாட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
இரண்டு பெரிய வீரர்கள் டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் கே எல் ராகுல் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், கில் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு இது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய் ஸ்வாலின் சிறு வயது பயிற்சியாளர் ஜுவாலா சிங் இந்திய அணி எப்படி விராட் கோலி, சச்சின் மற்றும் டிராவிட் ஆகியோரை பேட்டிங் வரிசையில் அதிக அளவில் சார்ந்து இருந்ததோ அதேபோல இனி ஜெய்ஸ்வாலை அதிகம் சார்ந்து இருக்கும் என சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவரை சார்ந்து இருக்க வேண்டும்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” சிறுவயதிலிருந்தே நான் அவரது குணத்தை பார்க்கும் போது முடிவுகளை எடுப்பதில் நல்ல மனிதராக இருக்கிறார். எனக்கு பல விஷயங்கள் நினைவில் உள்ளன. அவர் ஒரு மூத்த வீரராக தன்னை நிலை நிறுத்திக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவர் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் தன்னை நன்றாக நிலை நிறுத்திக் கொண்டுள்ளார். அவர் முடிவு செய்து பயிற்சி ஆட்டங்களில் சூழ்நிலைகளுக்கு நன்றாக பழகி விட்டால், அதிக ரன்கள் எடுப்பார் என்று உறுதியான நம்புகிறேன்.
இதையும் படிங்க:வெற்றி பெற இருந்த நல்ல வாய்ப்பை ஆஸி அணி இந்த இடத்தில் வீணடித்தது.. ஆஸி முன்னாள் கிரிக்கெட் வீரர் வருத்தம்
சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விராட் கோலி போன்றவர்களை போலவே இந்திய பேட்டிங் வரிசையும் இவரை நிச்சயமாக சார்ந்து இருக்கும் என்று நம்புகிறேன். அவர் அந்த பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி சிறப்பாக செயல்பட்டால் கடந்த காலங்களில் அவர்கள் மூன்று பேரும் செய்த பாத்திரத்தை இவர் தற்போது சிறப்பாக செய்ய வேண்டும்” என அவர் கூறியிருக்கிறார்.






