நாளை அமெரிக்கா வெஸ்ட் இண்டீசில் துவங்க இருக்கும் ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் களமிறங்க வேண்டுமென இர்பான் கூறியிருக்கிறார். இதற்கான காரணங்கள் குறித்து அவர் விரிவாக பேசியிருக்கிறார்.
நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் சிவம் துபேவை ப்ளேயிங் லெவனு க்குள் கொண்டு வர வசதியாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
மேலும் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மொத்தம் 15 போட்டிகளில் 741 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பையை கைப்பற்றியிருந்தார். அவரது பேட்டிங் ஃபார்ம் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் மற்றும் ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது.
விராட் கோலி பவர் பிளேவில் விளையாடும் பொழுது அதை பயன்படுத்தி சிறந்த முறையில் பவுண்டரிகள் எடுக்கக் கூடியவர். பவர் பிளே முடிந்து சுழல் பந்து வைத்து வந்தால் அதை எதிர் கொள்ளவும் அவர் ஆடுகளத்திற்கு தகுந்தவாறு பழகி இருக்க முடியும். எனவே அவர் முதலில் விளையாட வேண்டியது அவசியம் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் இர்பான் பதான் இதுகுறித்து கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் போல ஒரு இடதுகை வீரர் துவக்க ஆட்டக்காரராக வருவது மிகவும் முக்கியம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வலதுகை பேட்ஸ்மேன்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரராக வந்தால், உடனே ஒரு இடதுகை சுழல் பந்துவீச்சாளர் கொண்டுவரப்படுவார். அது அவர்களுக்கு ஒரு போராட்டமாக அமைந்து விடும்.
இதையும் படிங்க : 2022 மொத்தமா எல்லாரும் மனசு ஒடிஞ்சு போயிட்டோம்.. ஆனா இந்த முறை விடமாட்டோம் – பூரன் பேட்டி
அதுவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் வந்தால் ஜெய்ஸ்வால் துவக்க ஆட்டக்காரராக விளையாட முடியும். இங்கு இடது மற்றும் வலது கை காம்பினேஷன் முக்கியமானது. பந்து காற்றில் நகரும் போதோ அல்லது பந்து திரும்பும் பொழுதோ இடது கை பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்குள் வருவார்கள். எனவே அங்கு ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது முக்கியம்” என்று கூறியிருக்கிறார்.