2022 மொத்தமா எல்லாரும் மனசு ஒடிஞ்சு போயிட்டோம்.. ஆனா இந்த முறை விடமாட்டோம் – பூரன் பேட்டி

0
96
Pooran

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் அசுர பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்த வெஸ்ட் இண்டிஸ் அணி இன்று மிகவும் பரிதாபமான ஒரு நிலைமையில் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அவர்களது நாட்டில் டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெற இருப்பது குறித்து அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் பேசியிருக்கிறார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டிஸ் அணி தகுதி பெறவில்லை. அப்பொழுது தங்கள் அணியில் இடம் பெற்று இருந்த அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளிடம் தோல்வி அடைந்து வெஸ்ட் இண்டிஸ் அணி பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கும் வெஸ்ட் இண்டிஸ் அணி தகுதி பெற முடியவில்லை. இதனால் இந்தியாவில் நடந்த மாபெரும் கிரிக்கெட் திருவிழாவில் மிகப்பெரிய கிரிக்கெட் மரபைக் கொண்ட வெஸ்ட் இண்டிஸ் அணி விளையாட முடியாமல் போனது.

இந்த நிலையில் இதுகுறித்து நிக்கோலஸ் பூரன் பேசும் பொழுது “நாங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு தகுதி பெறாத பொழுது அணியில் இருந்த எல்லோரும் பெரிய மனக்காயமடைந்தார்கள். நான் கேப்டன் பகுதியில் இருந்து ராஜினாமா செய்தேன். ஆனால் தற்போது இருக்கும் வீரர்களுக்கு என்ன ஆபத்து இருக்கிறது என்பது நன்றாக தெரியும். எங்களை வெளிப்படையாக மீட்டுக் கொள்ளவும், கரீபியனிலும் மற்றும் வெளியிலும் இருக்கும் எங்கள் ரசிகர்களை பெருமைப்படுத்தவும், எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நேரத்தில் நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக இருக்கிறோம். உலகெங்கும் நடக்கும் டி20 கிரிக்கெட் லீகுகளில் விளையாடும் எங்களுடைய வீரர்கள், தொழில் முறை வீரர்கள் ஆக என்ன செய்ய வேண்டும்? என்பதை தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாங்கள் விளையாடிய தொடரில் பெரிய வீரர்கள் சிலர் இல்லை. ஆனால் அந்தத் தொடரின் மூன்று போட்டிகளையும் நாங்கள் வென்றோம். எங்களுடைய வீரர்கள் சிறப்பாக ஃபைட் செய்தார்கள். அதுதான் எங்களுக்கு தேவையானது.

இதையும் படிங்க : ரோகித் இந்த 11 பேர் வச்சு விளையாடுங்க.. இவங்க 2 பேர் வேண்டாம் – ஹர்பஜன் சிங் பிளேயிங் லெவன்

நாங்கள் வெற்றி பெறலாம் இல்லை வெற்றி பெறாமல் போகலாம். ஆனால் ஒரு மூத்த வீரராக களத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நான் 100% கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் திரும்பி வந்து மீண்டும் உலகக்கோப்பை விளையாடுகிறோம். நாங்கள் உலகக் கோப்பையை வென்ற பொழுது பெற்ற சிறப்பு உணர்வை மீண்டும் பெற விரும்புகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -