இந்திய அணி வீரர்கள் அணியின் மூத்த வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினை பெருமைப்படுத்தும் விதமாகவும் அதே சமயத்தில் கலகலப்பாகவும் உரையாடலை நடத்தி இருக்கிறார்கள். மேலும் ஜெய்ஸ்வால் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து மிகவும் உயர்வாக பேசி இருக்கிறார்.
தற்போதைய இந்திய அணியில் மூத்த வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருக்கிறார்கள். இதில் ரோஹித் சர்மா கேப்டன் மற்றும் விராட் கோலி நட்சத்திர பேட்ஸ்மேன் என்கின்ற வரிசையில் வருகிறார்கள். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு மூத்த வீரர் என்பதை தாண்டி கிரிக்கெட்டை ஆழமாக புரிந்தவர் என்கின்ற அடிப்படையில் வீரர்களிடம் நல்ல மரியாதை உண்டு!
வட இந்தியாவில் பரவும் அஸ்வின் பெயர்
வட இந்தியா பக்கம் அண்ணா என்றால் தலைவர் என்பது போன்றான பொருளை தரக்கூடியது. எனவே வட இந்தியா பக்கம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரவிச்சந்திரன் அஸ்வினை பெருமைப்படுத்தும் விதமாக “ஆஷ் அண்ணா” என்று அழைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
மேலும் ரவிச்சந்திரன் அஸ்வினை வீரேந்திர சேவாக் கிரிக்கெட் சயின்டிஸ்ட் என்று குறிப்பிடுவார். எனவே கிரிக்கெட்டை அறிவு ரீதியாக அணுகுவதில் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் சிறந்தவர். எனவே ரவிச்சந்திரன் அஸ்வினை அணுக கூடியவர்கள் இதன் காரணமாக மிகவும் மரியாதையாக அணுகுவார்கள். இந்திய அணியில் உடன் விளையாடும் வீரர்களும் அப்படியான மரியாதையை அவருக்கு கொடுப்பார்கள்.
பும்ரா ஜடேஜா கலகலப்பு
இந்த நிலையில் இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக கான்பூர் வரும் பொழுது இந்திய வீரர்கள் பும்ரா மற்றும் ஜடேஜா இருவரும் ரவிச்சந்திரன் அஸ்வினி கலகலப்பான முறையில் நகைச்சுவை செய்தார்கள். அதில் ஜடேஜா அஸ்வினை காட்டி “ஆஷ் அண்ணா” என்றார். இன்னொரு பக்கத்தில் தோனியை “தல ஃபார் ரீசன்” என்று சொல்வது போல, அதை வைத்து பும்ரா “ஆஷ் அண்ணா ஃபார் ரீசன்” என்று சொல்ல, இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் “இவர்கள் இருவரும் என்னை கேலி செய்கிறார்கள்” என்று நகைச்சுவையாக திருப்பி கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : புரிஞ்சுக்கோங்க.. முதல் மேட்ச் நான் தப்பா எதுவும் பேசல.. சொல்ல வந்தது இதுதான் – இங்கிலாந்து ஹாரி புரூக் விளக்கம்
அதே சமயத்தில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் உடன் இணைந்து விளையாடி வரும் ஜெய்ஸ்வால் ரவிச்சந்திரன் அஸ்வினை கூறும் பொழுது “அஸ்வின் அண்ணா எனக்கு சச்சின் டெண்டுல்கர் ஸார் போல மிகவும் பெரியவர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் தன்னுடைய வயதுக்கு ரவிச்சந்திரன் அஸ்வினிடம் நகைச்சுவை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!
A journey full of smiles from Chennai to Kanpur 😃👌#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/awGef5q1Jd
— BCCI (@BCCI) September 25, 2024