இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் மூன்றாவது போட்டிக்கு தயாராகும் விதமாக இன்று அடிலெய்டில் இருந்து பிரஸ்பேனுக்கு இந்திய அணி வீரர்கள் புறப்பட்டு சென்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய நட்சத்திர தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மீது அணியின் கேப்டன் ரோகித் சர்மா கோபமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிரிஸ்பேனில் மூன்றாவது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று தொடரானது தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு தங்கி இருந்த அடிலெய்டு மைதானத்தில் இருந்து அடுத்த போட்டி நடைபெற உள்ள பிரிஸ்பேனுக்கு செல்ல இரண்டு பேருந்துகள் இந்திய அணி வீரர்களுக்கு தயார் செய்யப்பட்டிருந்தது.
பேருந்தின் மூலம் விமான நிலையம் செல்வதற்கு திட்டமிட்ட நிலையில் அந்த இரண்டு போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் மட்டுமல்லாமல் பயிற்சியாளர் கம்பீர், தேர்வு குழு தலைவர் அகர்கர் ஆகியோர் அமர இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மட்டும் வரவில்லை. எப்போதுமே நேரத்தை சரியாக கடைபிடிக்கும் ஜெய்ஸ்வால் இந்த முறை பேருந்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் வராததால் அவர் மீது ரோகித் சர்மா கோபமடைந்தார். மேலும் பேருந்தில் இருந்து வெளியே வந்து அவரை கண்காணிக்கும் படி உதவியாளர்களிடம் கூற ரொம்ப நேரம் ஆகியும் அவர் வராததால் பேருந்து புறப்பட்டு சென்றது.
ஜெய்ஸ்வாலை விட்டுச் சென்ற பேருந்து
இந்த சூழ்நிலையில் பேருந்துகள் புறப்பட்டுச் சென்ற பின்னர் ஜெய்ஸ்வால் ஹோட்டல் அறையை விட்டு வெளியே வந்தார். இருப்பினும் அவருக்காக கார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதற்குப் பின்னர் ஜெய்ஸ்வால் கார் மூலமாக விமான நிலையம் சென்று அடைந்தார் என்று கூறப்படுகிறது. அதே வேளையில் இந்திய அணியின் விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் குடும்பத்தோடு வந்திருந்ததால் அவர்கள் பட்டய விமானம் மூலம் பிரிஸ்பேனுக்கு சென்றனர்.
இதையும் படிங்க:1 ஓவர் 11 ரன்.. கடைசி பந்து திரில்.. ஆப்கான் அணியை வென்றது ஜிம்பாப்வே.. முதல் டி20 போட்டி
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். மேலும் அதற்குப் பிறகு நடைபெற்ற பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதற்கு அடுத்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணிக்கு இவரது ஆட்டம் முக்கியமாக இருக்கிறது.