அஸ்வின் ஓய்வு பெற காரணம் இதுதான்.. இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் – கோச் WV ராமன் பேட்டி

0
279

இந்திய முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டபிள்யூவி.ராமன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதற்கான காரணம் குறித்து பேசி இருக்கிறார்.

இவர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஆரம்ப காலகட்டத்தில் பயிற்சியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் பந்துவீச்சில் பல மாற்றங்களை சிறிய வயதிலேயே செய்வதற்கு ஊக்கமளித்த பயிற்சியாளராக இருந்திருக்கிறார். இந்த வகையில் இவர்கள் இருவருக்கும் நல்ல புரிதல் இருந்திருக்கிறது.

- Advertisement -

அஸ்வின் விஷயத்தில் எழும் யூகங்கள்

ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியின் போதே அஸ்வின் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டார் என கேப்டன் ரோகித் சர்மா கூறியிருந்தார். முதல் போட்டியிலேயே அவரை விளையாடாமல் உட்கார வைத்ததின் மூலம், மீண்டும் தன்னை அழைத்து வந்து முழுத் தொடர்க்கும் வெளியில்தான் வைப்பார்கள் என்று அஸ்வின் முடிவுக்கு வந்துவிட்டதை இது காட்டுகிறது.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அவரை பெஞ்சில் உட்கார வைப்பது வாடிக்கையாக மாறி இருக்கிறது. இதில் அவருக்கு நிறைய அதிருப்தி வெளிப்படையாகவே இருந்தது. இனியும் வெளிநாட்டில் வந்து பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது என அஸ்வின் ஓய்வு பெற்று இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.

- Advertisement -

பயிற்சியாளர் டபிள்யூவி.ராமன் கருத்து

இதுகுறித்து டபிள்யூவி.ராமன் கூறும் பொழுது “அஸ்வினுக்கும் முன்பாகவும் ஒரு வீரர் தொடரின் பாதியில் திடீரென ஓய்வு பெற்றதாக நினைக்கிறேன். இப்படி நடப்பது முதல் முறை கிடையாது. ஒரு வீரர் தனக்கு போதும் என்று கருதும் போது ஓய்வுக்கு வருகிறார். இது எல்லாம் ஒருவரது மனதில் வேகம் குறைவது மற்றும் திடீரென போதும் என்ற உணர்வு வருவதால் எழுவது. அந்த இடத்திலிருந்து தினமும் மைதானத்திற்கு சென்று வழக்கமான வேலைகளை செய்வது மிகவும் கடினம்”

  1. இதையும் படிங்கபும்ரா மற்ற பவுலர்களுக்கு அவமரியாதை பண்ணல.. ஆனா இந்த வேலைய அவர்தான் செய்யறார் – பிரட் லீ பேட்டி

“இது அவரது மனதில் எப்பொழுது நிகழ்ந்தது என்பதை மிகச் சரியாக சொல்ல முடியாது. ஆனால் நிகழும் பொழுது ஒரு வீரர் ஓய்வை அறிவிக்கிறார். அவர் நீண்ட காலமாக அணியில் இருக்கிறார். இப்படி இருக்கும் பொழுது அவர் அணிக்கு எந்த பங்களிப்பையும் செய்யப் போவதில்லை என்று தெரிந்தால் அணியுடன் சும்மா சுற்றி திரிவதை விரும்பாமல் இருந்திருக்கலாம். இதனால் அவர் ஓய்வு முடிவுக்கு வந்திருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -