பும்ரா மற்ற பவுலர்களுக்கு அவமரியாதை பண்ணல.. ஆனா இந்த வேலைய அவர்தான் செய்யறார் – பிரட் லீ பேட்டி

0
167

இந்திய அணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனி ஒரு வீரராக இந்திய அணியின் பவுலிங் சுமையை தன் தோள்களில் தாங்கி வருகிறார் என ஆஸ்திரேலிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் பிரட் லீ பேசியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் இந்திய அணி தற்பொழுது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமநிலையில் இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு போட்டிகள் மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

21 விக்கெட்டுகள்

இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக பும்ரா 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். அவர் பந்துவீச்சில் கொடுத்துள்ள இந்த தாக்கம் மட்டுமே இந்திய அணி ஒரு போட்டியை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இல்லையென்றால் இந்திய அணி தற்பொழுது இரண்டுக்கு பூஜ்ஜியம் என இந்த தொடரில் பின்தங்கி இருந்திருக்கும்.

அதே சமயத்தில் சமயத்தில் பும்ராவுக்கு பந்துவீச்சு முனையில் ஆதரவு தருவதற்கு தற்பொழுது முகமது ஷமி இல்லை. முகமது சிராஜ் நல்ல பவுலிங் ஃபார்மில் இல்லை. இதனால் தனி ஒரு வீரராக போராட வேண்டிய நிலைக்கு பும்ரா தள்ளப்பட்டு இருக்கிறார். இருந்த போதிலும் கூட அவர் தனியாக மிகப்பெரிய தாக்கத்தை ஒவ்வொரு போட்டியிலும் செய்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

மற்றவர்களுக்கு இது அவமரியாதை இல்லை

இது குறித்து பிரட் லீ கூறும் பொழுது ” பும்ரா உலகத்தரம் வாய்ந்தவர். ஆனால் துரதிஷ்ட வசமாக தற்பொழுது ஷமி இல்லை. இருந்த போதிலும் சிராஜ் ஓரளவுக்கு ஆதரவு கொடுப்பதாகவே நான் நினைக்கிறேன். என் கருத்துப்படி இந்தியா சில நல்ல பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கிறது. ஆனால் பந்துவீச்சு தாக்குதலில் முழு சுமையை பும்ரா மட்டுமே தாங்குகிறார் என்று மக்கள் சொல்வதற்கு காரணம் அவர் சிறந்தவராக இருக்கிறார்”

இதையும் படிங்க : அஸ்வின் மேட்ச் வின்னர் எல்லாம் கிடையாது.. இந்த முடிவை அப்பவே எடுத்திருக்கணும் -பாக் பசித் அலி கருத்து

“பும்ரா மற்ற பந்துவீச்சாளர்களை விட பல மைல்கள் முன்னே இருக்கிறார். இது மற்ற பந்துவீச்சாளர்களை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை. அவர்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பும்ரா அவர்களை விட மிகச் சிறந்தவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -