இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி முடிவடைவதற்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளி பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் மேலே சென்று இருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி கீழே சரிந்து இருக்கிறது.
முக்கியத்துவம் வாய்ந்த தொடர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு அணியும் முதலில் தங்கள் சொந்த மண்ணில் விளையாடும் தொடர்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. எனவே இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.
கடைசியாக இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த காரணத்தினால் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை. தற்போது இந்த போட்டியில் தோல்வி அடைந்திருப்பதும் இந்திய அணிக்கு பின்னடைவை உருவாக்குகிறது.
ஆதிக்கத்தில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா
ஆஸ்திரேலியா அணி இதுவரையில் விளையாடியிருக்கும் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று நூறு வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்க அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வி உடன் 66.67 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
இந்த பட்டியலில் இலங்கையணி இரண்டு டெஸ்ட் போட்டியில் ஒரு போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் டிராவும் கண்டு 66.67 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் இந்திய அணி எட்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கில் வெற்றி, மூன்றில் தோல்வி, ஒரு ட்ரா என 54.17 வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : கொல்கத்தா ஆடுகளம் நாங்கள் கேட்டதுதான்.. பிரச்சனை வீரர்களின் திறமை இல்லை வேறுறொன்று – கம்பீர் ஏற்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :
ஆஸ்திரேலியா 3 போட்டிகள் – 36 புள்ளிகள் – 100.00 வெற்றி சதவீதம்
தென் ஆப்பிரிக்கா – 3 – 24 – 66.67
இலங்கை- 2 – 16 – 66.67
இந்தியா – 8 – 52 – 54.17
பாகிஸ்தான் – 2 – 12 – 50.00
இங்கிலாந்து 5 – 26 – 43.33
பங்களாதேஷ் – 2 – 4 – 16.67
வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீஸ் 5 – 0 – 0.00






