கொல்கத்தா ஆடுகளம் நாங்கள் கேட்டதுதான்.. பிரச்சனை வீரர்களின் திறமை இல்லை வேறுறொன்று – கம்பீர் ஏற்பு

0
20
Gambhir

இந்தியா தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் தாங்கள் கேட்டதுதான் என இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் மிகவும் மோசமாக இருக்கிறது என இந்திய முன்னாள் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு முன்னால் வீரர்கள் பலரும் குற்றம் சுமத்தி வந்தார்கள். இந்த நிலையில் இந்திய தலைமை பயிற்சியாளர் தாங்களே இப்படிப்பட்ட ஒரு ஆடுகளத்தை கேட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

காரணம் என்ன?

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “இப்படிப்பட்ட ஒரு ஆடு களத்தை விரும்பியதற்கான காரணம் என்னவென்றால் நீங்கள் இதில் எப்படி விளையாடுகிறீர்கள் என்று பார்க்கத்தான். நாங்கள் கேட்டபடிதான் ஆடுகளம் கொடுக்கப்பட்டது. ஆடுகளத் தயாரிப்பாளர் எங்களுக்கு மிகவும் ஒத்துழைப்பாகவே இருந்தார். விக்கெட் எப்படி இருந்திருந்தாலும் 124 ரன்கள் துரத்த கூடியதுதான்”

“நாங்கள் எல்லா சூழ்நிலையிலும் ஒரு 50 ரன் பார்ட்னர்ஷிப் பெற முடியும் என்று நம்பினோம். வாஷிங்டன் மற்றும் துருவ் ஜுரல் விளையாடிய பொழுதும், வாஷிங்டன் ஜடேஜா விளையாடிய பொழுதும் எங்களுக்கு அதற்கான வாய்ப்புகள் இருந்தது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சுழல் பந்து வீச்சிக்கு எதிராக நாம் திறமையை மேம்படுத்த வேண்டுமா அல்லது மனநிலையை மேம்படுத்த வேண்டுமா?” என்பதுதான்.

- Advertisement -

திறமை பிரச்சனை இல்லை

” நாம் பழைய சகாப்தங்களை இப்பொழுது ஒப்பிட கூடாது. ஏனென்றால் அப்போது டிஆர்எஸ் முறை கிடையாது. இப்பொழுது எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். இது திறமையை விட மனநிலை பற்றியது. கடினமான நேரத்தில் அழுத்தத்தை உள்வாங்குவது பற்றியது”

இதையும் படிங்க : வெறும் 7 ரன்.. வெஸ்ட் இண்டீஸ் நியூசி இடையே.. டி20 போட்டியாக மாறிய ODI மேட்ச்.. திரில் முடிவு

“அதே சமயத்தில் பேட்ஸ்மேன்கள் மீது பழி சுமத்துவதில் நியாயம் இல்லை. அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையுமே கொடுத்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இதுபோன்ற விக்கட்டுகளில் விளையாட வேண்டும் என்றால் நாம் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -