டெஸ்ட் கிரிக்கெட் ரேங்கிங் வெளியானது… உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலால் சரிவை சந்தித்த விராட் கோலி, ரோகித் சர்மா! நம்பர் 1 இடத்தில் யார்?

0
2369

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட் ரேங்கிங் வெளியாகியுள்ளது. அதில் விராட் கோலி சரிவை சந்தித்துள்ளார். நம்பர் ஒன் இடத்தை மார்னஸ் லபுஜானே இழந்திருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி படுமோசமாக செயல்பட்டது. தோல்வியையும் தழுவியுள்ளது. ஆஸ்திரேலியா அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் அஜிங்கியா ரகானே தவிர விராட் கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் இரண்டு இன்னிங்சிலும் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. இதுவும் இந்திய அணையின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் ஐசிசி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு பிறகு தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த மார்னஸ் லபுஜானே இந்த வருடம் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்பதால் நம்பர் ஒன் இடத்தை இழந்திருக்கிறார்.

இந்த வருடம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஐந்து அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் உட்பட 539 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட 110 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார். ஆகையால் மீண்டும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

முதலிடத்தில் இருந்த மார்னஸ் லபுஜானே மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். நான்காவது இடத்தில் ஸ்மித் இருக்கிறார். முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் ரிஷப் பன்ட் மட்டுமே இருக்கிறார். இவரும் பத்தாவது இடத்தில் இருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் சற்று மோசமாக செயல்பட்ட விராட் கோலி, தரவரிசை பட்டியலில் ஒரு இடம் பின்தங்கி தற்போது 14வது இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா தொடர்ந்து 12 இடத்தில் இருக்கிறார்.