உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்.. தெறிக்கவிட்ட பாட் கம்மின்ஸ்.. 138 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா

0
165

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென்னாப்பிரிக்க அணி 138 ரன்களில் சுருண்டது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து தென்னாபிரிக்க அணியின் அபார பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலிய அணி 212 ரன்களில் அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

- Advertisement -

பவுமா, பெட்டிங்காம் போராட்டம்:

இதனை அடுத்து தென்னாப்பிரிக்க அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் விளையாடியது. முதல் ஓவரிலே அந்த அணியின் தொடக்க வீரர் ஏய்டன் மார்க்கரம்  டக் அவுட்டாகி வெளியேறினர். வியான் முல்டர் ஆறு ரன்களிலும், ரியான் ரிக்கல்டன்  16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் இரண்டு ரன்களில் திரும்பினார்.

இதனை அடுத்து தென்னாபிரிக்க அணி 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. கேப்டன் பவுமா மற்றும் டேவிட் பெட்டிங்காம் ஆகியோர் களத்தில் நின்று ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டனர்.

- Advertisement -

கம்மின்ஸ் அபார பந்துவீச்சு:

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் பவுமா, மார்னஸ் லாபஸ்சென்னின் அபாரமான  கேட்சால் 36 ரன்களில் ஆட்டம் இழந்தார். தென்னாப்பிரிக்கா அணியில் தனி ஆளாக பேட்டிங்கில் போராடிய டேவிட் பெட்டிங்காம் 111 பந்துகளில் 45 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் ஆட்டம் இழந்தனர்.

இதையும் படிங்க: இந்திய அணியில் அந்த தப்பு மட்டும் செய்யாதீங்க.. பேட்டிங் வரிசை குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கருத்து

குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் பேட்டிங்காம் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பாட் கம்மின்ஸ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில்  138 ரன்களில் ஆட்டம் இழந்தது. இது ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 74 ரன்கள் குறைவாகும்.

- Advertisement -