உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு ஆஸ்திரேலியா அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை தென்னாப்பிரிக்கா அணி கைப்பற்றி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் முதல்முறையாக ஐசிசி உலக கோப்பையை தென்னாப்பிரிக்க அணி வென்றுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வென்ற அணி மற்றும் இறுதிப் போட்டியில் ரன்னர் அப் பட்டம் வென்ற அணி, மூன்றாவது இடம் மற்றும் நான்காவது இடம் பிடித்த அணிக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்பட்டிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
ஆஸி, தென்னாப்பிரிக்கா பரிசுத்தொகை எவ்வளவு?
ஐசிசி வரலாற்றில் இந்தத் தொடருக்கு தான் பரிசுத்தொகை பெரிய அளவு வழங்கப்பட்டிருக்கிறது. சாம்பியன் பட்டம் பெற்ற தென்னாப்பிரிக்கா அணிக்கு 30 கோடியே 70 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த ஆஸ்திரேலியா அணிக்கு 18 கோடியே 56 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது.
மூன்றாவது இடம் பிடித்த இந்திய அணிக்கு 12 கோடியே 13 லட்சம் ரூபாயும், நான்காவது இடம் பிடித்த நியூஸிலாந்து அணிக்கு 10 கோடியே 26 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகை கிடைத்திருக்கிறது. ஐந்தாவது இடம் பிடித்த இங்கிலாந்து அணிக்கு எட்டு கோடியே 20 லட்சம் ரூபாயும், ஆறாவது இடம் பிடித்த இலங்கை அணி 7 கோடியே 18 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.100 கோடி பரிசுத் தொகை:
ஏழாவது இடம் பிடித்த வங்கதேசத்திற்கு 6 கோடி 15 லட்சம் ரூபாயும், எட்டாவது இடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஐந்து கோடியே 13 லட்சம் ரூபாயும், 9ஆம் இடம் பிடித்த பாகிஸ்தான் அணிக்கு 4 கோடியே 10 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா புயலில் அமைதியை காட்டியது.. இந்த 2 பேர் செஞ்சது வரலாற்று சம்பவம் – சச்சின் வாழ்த்து
இந்த தொடரில் பங்கு பெற்ற ஒன்பது அணிகளுக்கும் ஐசிசி பரிசுத் தொகையை வழங்கி டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவித்து இருக்கிறது. 30 கோடி என்ற பரிசு தென்னாப்பிரிக்க கிரிக்கெட் பொறுத்த வரை மிகப் பெரிய பரிசாக பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கு மேல் பரிசுத்தொகை ஐசிசியால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டதை இரு பிரிவாக பிரித்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்திருக்கிறது.






