தென் ஆப்பிரிக்கா புயலில் அமைதியை காட்டியது.. இந்த 2 பேர் செஞ்சது வரலாற்று சம்பவம் – சச்சின் வாழ்த்து

0
703
Sachin

இன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்க அணிக்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெம்பா பவுமா தலைமையில் முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பை தொடர் ஒன்றை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. மேலும் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி தொடரை வென்று, நீண்டகால ஐசிசி தொடர் வெற்றி வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

- Advertisement -

யுவராஜ் சிங் தெரிவித்த வாழ்த்து

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் “2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! 27 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து தென் ஆப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்று இருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியை பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”

“டெஸ்ட் கிரிக்கெட் விட மீள்தன்மை மற்றும் குண நலனை காட்டுவதில் வேறு எதுவும் பெரியது கிடையாது என எப்பொழுதும் நான் நம்பி இருக்கிறேன். தென் ஆப்பிரிக்கா அணி அந்த சந்தர்ப்பத்திற்கான நேரத்தில் சரியான முறையில் உயர்ந்து நின்று இருக்கிறது. மார்க்ரம் சதம் அற்புதமானது. ரபாடா, யான்சன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் இடைவிடாத தீவிரத்தை கொண்டு வந்தார்கள். பவுமா அமைதியாகவும் தைரியத்துடனும் அணியை வழி நடத்தினார். ஆஸ்திரேலியா ஒரு கோப்பையை விட்டுக் கொடுத்தாலும் அதனால அவர்களுக்கு எந்த நஷ்டமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

புயலில் ஒரு அமைதி

சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய வாழ்த்துச் செய்திகள் கூறும்பொழுது “இந்த டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு செசனும் அதனுடைய சொந்த கதைகளை கொண்டிருந்தது. தென் ஆப்பிரிக்க அணி புயலிலும் ஒரு அமைதியைக் கொண்டிருந்தது. அழுத்தத்தின் கீழ் மார்க்கம் அமைதியும், பவுமாவின் மன உறுதியும் உயர்ந்து நின்றன”

இதையும் படிங்க : என் விஷயத்துல இது விசித்திரமானது.. ஆனா எல்லா புகழும் பவுமாவுக்குதான்.. காரணம் இதான் – மார்க்ரம் பேட்டி

“மார்க்ரம் அடித்துள்ள சதம் எப்பொழுதும் நினைவில் நிற்கக்கூடியது. அது நம்பிக்கையை வரலாறாக மாற்றிய பார்ட்னர்ஷிப். உலக டெஸ்ட் சாம்பியன்களான தென் ஆப்பிரிக்காவுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் பாராட்டுகளும்+ என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -