உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: தடுமாறும் ஆஸ்திரேலியா.. வாய்ப்பை தவறவிட்ட தென்னாப்பிரிக்கா

0
265

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி தடுமாறி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக கேமரான் கிரீன் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார்.இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஒரே ஓவரின் மூன்று பந்துகள் இடைவெளியில் ரபாடா வீழ்த்தினார். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

- Advertisement -

போராடிய ஸ்மித்:

மார்னஸ் லாபஸ்சென்  நிதானமாக விளையாடி 56 பந்துகளை எதிர்கொண்டு 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜான்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிராவிஸ் ஹெட் 13 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதை அடுத்து ஸ்மித் மற்றும் வெப்ஸ்டர் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது.

அபாரமாக விளையாடிய ஸ்மித் அரை சதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், ஏய்டன் மார்க்கரம் பந்துவீச்சில் 66 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் இழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 146 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் 300 ரன்கள் அடிக்க வேண்டும் என ஆஸ்திரேலிய அணி முயற்சித்து வருகிறது.

- Advertisement -

அபார பந்துவீச்சு:

தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியாவை 230 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என முயற்சித்து வருகிறார்கள். தற்போது வரை பந்துவீச்சு ரபாடா மற்றும் ஜான்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மகன் வந்த பிறகு தான் பும்ரா மாறினார்..  மனைவி சஞ்சனா வெளியிட்ட உருக்கமான கருத்து

இதனிடையே ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் வெப்ஸ்டர் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர் lbw ஆனார்.ஆனால் இதற்கு நடுவர் அவுட் தரவில்லை. கைவசம் டிஆர்எஸ் இருந்தும் பவுமா அதனை ரிவ்யூ கேட்கவில்லை. ஒருவேலை அவர் ரிவியூ கேட்டிருந்தால் ஆட்டம் இழந்திருக்கலாம். இந்த வாய்ப்பை தென் ஆப்பிரிக்கா தவறவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

- Advertisement -