தொடர்ந்து 5 போட்டிகள் தோற்றபிறகும், பிளே-ஆப் சுற்றுக்கு ஆர்சிபி பெண்கள் அணியால் முடியும்.. அதற்கு என்னென்ன நடக்கவேண்டும்? – ரிப்போர்ட்!

0
188

தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் தோல்வியுற்ற ஆர்சிபி பெண்கள் அணிக்கு இன்னும் பிளே-ஆப் சுற்றுக்கான வாய்ப்பு இருக்கிறது. அது எப்படி சாத்தியமாகும்? என்பதை பின்வருமாறு காண்போம்.

பெண்களுக்கான பிரிமியர் லீக் தொடர் முதல் முறையாக நடைபெற்று வருகிறது. இந்த முதலாம் ஆண்டில் ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. கடந்த மார்ச் இரண்டாம் தேதியில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் பலமிக்க அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஆர்சிபி பெண்கள் அணி, துரதிஷ்டவசமாக தற்போது வரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியுற்றிருக்கிறது. 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வியுற்றிருப்பதால் பலரும் ஆர்சிபி பெண்கள் அணிக்கு பிளே-ஆப் செல்லும் வாய்ப்பு மொத்தமாக முடிந்து விட்டது என்று யூகிக்கிறார்கள்.

ஆனால் இன்னும் ஆர்சிபி பெண்கள் அணிக்கு அந்த வாய்ப்பு இருக்கிறது. அதற்கு என்னென்ன நடக்க வேண்டும்? மேலும் ஆர்சிபி பெண்கள் அணி அதற்காக என்ன செய்ய வேண்டும்? என்ற சூழல்களை பின்வருமாறு பார்ப்போம்.

முதலில் பிளே-ஆப் சுற்றுக்கான தகுதி எவ்வாறு நிகழ்கிறது என்பதை காண்போம். லீக் சுற்றுகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கும் அணி எலிமினேட்டர் சுற்றில் மோதி, அதில் வெற்றி பெறும் அணி 2வது அணியாக பைனலுக்கு தகுதி பெறும்.

- Advertisement -

தற்போது ஆர்சிபி அணி அதிகபட்சமாக மூன்றாவது இடத்தை பிடிக்க முடியும். அதற்கான என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன. தகுதி பெற என்னென்ன நடக்க வேண்டும் என்றால்,

  1. முதலில் ஆர்சிபி பெண்கள் அணி தங்களுக்கு மீதம் இருக்கும் மூன்று போட்டிகளையும் வெற்றி பெற்றாக வேண்டும்.

2. புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மும்பை மற்றும் டெல்லி அணிகள் அடுத்ததாக தங்களுக்கு வரவிருக்கும் குஜராத் ஜெயின்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியை வெற்றி பெற வேண்டும்.

3. பின்னர் குஜராத் ஜெயின்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்த வேண்டும்.

இவை அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் ஆர்சிபி பெண்கள் அணி, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து எலிமினேட்டர் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது.