உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி ; இந்தியாவுக்கு தலைவலி தரும் இலங்கை!

0
386
Nz vs Sl

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்!

தற்சமயம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளையும் இலங்கை அணி வென்று, தற்பொழுது பார்டர் கவாஸ்கர் தொடரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோற்றால், இலங்கை அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடும்!

- Advertisement -

இப்படியான நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது. அதே சமயத்தில் நியூசிலாந்து இலங்கை அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது. இது இந்திய அணியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான கனவை கொஞ்சம் அசைத்துப் பார்த்திருக்கிறது!

இரண்டு நாட்களுக்கு முன் துவங்கப்பட்ட இலங்கை நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் முதலில் டாஸில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அனுபவம் மிக்க நியூசிலாந்து வேகப்பந்து வைத்து கூட்டணியின் முன்னால் இலங்கை அணி தாக்குப் பிடிக்காது என்று பலரும் நினைத்திருந்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக இலங்கை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இரண்டு நாட்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு கேப்டன் கருணரத்னே 50, அதிரடியாக விளையாடிய குசல் மெண்டிஸ் 87, அஞ்சலோ மேத்யூஸ் 47, தனஞ்செய டி
சில்வா 46 ரன்கள் எடுக்க, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 355 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் டாம் லாதம் 60, கான்வே 30 ரன்கள் என நல்ல துவக்கம் தந்தார்கள். ஆனால் இதற்கு அடுத்து மடமடவென்று விக்கட்டுகள் சரிந்து இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 162 ரண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து, 193 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெறும் பட்சத்தில், அதே சமயத்தில் இந்திய அணி தனது போட்டியில் வெற்றி பெறாத பட்சத்தில், இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முடிவை பொறுத்துதான், யார் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது முடிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது!