மகளிர் டி20 உலகக் கோப்பை ; பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தல்!

0
1918
WT20WC

பெண்கள் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் தற்சமயம் நடந்து வருகிறது. இந்த நடப்பு டி20 உலகக்கோப்பையில் இன்று இந்திய அணி பரபரப்பான முறையில் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது!

மொத்தம் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களை இரண்டு குழுவிலும் பிடிக்கும் நான்கு அணிகளை கொண்டு அரையிறுதி போட்டிகள் நடத்தப்பட்டு அதிலிருந்து இறுதிப்போட்டி அதிலிருந்து சாம்பியன் அணி கண்டறியப்படும்!

- Advertisement -

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் ஆகிய ஐந்து அணிகள் ஏ பிரிவிலும், இங்கிலாந்து, இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய ஐந்து அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றன.

இதில் ஏ பிரிவில் நான்கு போட்டிகளையும் வென்று ஆஸ்திரேலியா முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மூன்று போட்டிகளில் 2 புள்ளிகளை பெற்றுள்ள தென்னாபிரிக்க அணி பங்களாதேஷ் அணியுடன் கடைசி போட்டியில் மோத இருக்கிறது இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால் நேரடியாக அரை இறுதிக்கு தகுதி பெறும். இல்லையென்றால் நான்கு புள்ளிகள் உடன் உள்ள நியூசிலாந்து அணி தகுதி பெறும்.

இந்தியா இடம் பெற்றுள்ள பி பிரிவில் இங்கிலாந்து அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் அபாரமாக வென்று தற்பொழுது முதலிடத்தில் உள்ளது. மேலும் அரை இறுதிக்கும் தகுதி பெற்று உள்ளது. ரன் ரேட்டில் பெரிய அளவில் உள்ள இங்கிலாந்து தனது கடைசி போட்டியில் பாகிஸ்தான் அணி உடன் தோற்றாலும் குழுவில் முதலிடம் பிடிக்கும்.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணி இன்று அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான மிக முக்கியமான போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா மட்டுமே நம்பிக்கை அளித்தார். அவர் 56 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 87 ரன்கள் குவித்தார். மற்றும் ஒரு துவக்க வீராங்கனை செபாலி வர்மா 27 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இதற்கு அடுத்து களம் இறங்கி விளையாடிய அயர்லாந்து அணி ஒரு ரன்னுக்கு இரண்டு விக்கட்டை இழந்தாலும், அதற்கு அடுத்து அதிரடியாக விளையாடி 8. 2 ஓவரில் 54 ரன்கள் எடுத்திருந்தபொழுது மழை குறுக்கிட்டது. நேரம் தாண்டியும் மழை நிற்காத காரணத்தால் டக்வொர்த் லீவிஸ் படி இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து ரன்கள் அயர்லாந்து அணி சேர்த்து எடுத்திருந்தால் இந்திய அணி இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கும். தற்பொழுது ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ள வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி இறுதி ஆட்டத்தை ஆட வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது!