“தோனி இல்லாமல் சிஎஸ்கே இருக்காது” – வெளிப்படையாக பேசிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ராபின் உத்தப்பா!

0
350
Uthappa

இன்று ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே டெல்லி கேப்பிடல்சை எதிர்த்து அதன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது.

இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால் நேரடியாக பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறும். மேலும் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும் அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் இந்தப் போட்டியை தோற்றால் மும்பை அல்லது பெங்களூரு இந்த இரண்டு அணிகளில் ஒரு அணி அதன் கடைசிப் போட்டியில் தோற்க வேண்டும். இல்லையென்றால் லக்னோ தனது கடைசிப் போட்டியில் தோற்க வேண்டும்.

தற்பொழுது காயத்துடன் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி குறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது
“ஓய்வுக்குப் பின் எம்.எஸ் என்ன செய்வார்? என்பதை விட, அவர் இல்லாவிட்டால் சிஎஸ்கே இருக்காது என்று நான் நினைக்கிறேன். தோனி சிஎஸ்கே அணியில் ஏதாவது ஒரு அங்கமாக இருப்பார் என்றும் நினைக்கிறேன்.

இது அவரது கடைசி சீசனாக இருக்குமா? வெற்றி பெற்றால் இத்தோடு ஓய்வு பெற்று விடுவாரா? இம்பேக்ட் ப்ளேயர் விதி மொத்தமாக விளையாட்டை மாற்றி இருக்கிறது. அவருக்கு விளையாட்டு மீதான காதல் இன்னும் குறையவில்லை. அவர் இன்னும் அதை மிக உற்சாகமாக அணுகுகிறார்.

- Advertisement -

அவரைப் பார்ப்பதற்கு ‘இம்பேக்ட் பிளேயர் விதி இருப்பதால் என் முழங்கால் நன்றாக இருந்தால் இரண்டு மூன்று நான்கு அல்லது ஐந்து வருடங்கள் கூட விளையாட முடியும் மனிதனே! ஆனால் நான் பிட்டாக எவ்வளவு காலம் இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியாது!’ என்று சொல்வது போல் இருக்கிறது.

அவருடைய பிரச்சனை அவருக்கு முழங்கால் காயம்தான். அது வழக்கத்திற்கு மாறானது. அது சரியாக கவனிக்க பட்டால் அதற்கு தீர்வு காணப்பட்டால் அவர் தொடர்ந்து விளையாடுவார். இந்த விஷயத்தில் கவனம் செலுத்தப்படாவிட்டால் அவர் விளையாடுவது கடினம். ஆனால் அவர் மீண்டும் அடுத்த ஆண்டு வருவார் என்று நான் நினைக்கிறேன்!” என்று கூறியுள்ளார்!