2வது டி20 போட்டியில் ஏழு ஓவர் விதம் மீதமிருந்த நிலையில், தினேஷ் கார்த்திக்கு பதிலாக அக்ஸர் பட்டேலை அனுப்ப இதுவே காரணம் – ஸ்ரேயாஸ் ஐயர்

0
1213

இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டியில் நேற்று நடைபெற்று முடிந்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் தோல்வியை தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது. நேற்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 40 ரன்கள் குவித்தார்.

பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 18.2 ஓவர் முடிவில் இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கிளாஸன் 81 ரன்கள் குவித்து தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

- Advertisement -

இந்திய நிர்வாகம் செய்த ஒரு முடிவால் கேள்வி எழுப்பிய இந்திய ரசிகர்கள்

நேற்று இந்திய அணி முதலில் விளையாடியது.12.4 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டை இழந்தார். இந்திய அணி அப்பொழுது 92 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் தான் வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அக்ஸர் பட்டேல் உள்ளே வந்தார். அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.7 ஓவர்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் இந்திய அணியின் ஸ்கோர் சற்று குறைவாக இருந்தது எனவே தினேஷ் கார்த்திக் வந்து இருந்தால் இன்னும் சற்று அதிகமாக இருக்கும் என்று இந்திய ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

- Advertisement -

கார்த்திக் வராததற்கு இது தான் காரணம்

இது சம்பந்தமாக பேசியுள்ள ஸ்ரேயாஸ் முறையான விளக்கத்தை நமக்கு கொடுத்திருக்கிறார்.”நேற்று ஆட்டம் சற்று சவாலாக இருந்தது. 7 ஓவர்கள் மீதம் வேத நிலையில் அந்த நேரத்தில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து சிங்கிள் எடுத்தால் போதும் என்கிற நிலையில் இருந்தோம். எனவேதான் தினேஷ் கார்த்திக் பதிலாக அக்ஸர் பட்டேல் உள்ளே வந்தார்.

அதுமட்டுமின்றி தினேஷ் கார்த்திக் கடைசி 5 ஓவரில் வந்தால் சரியாக இருக்கும் என்று நாங்கள் முடிவு செய்தோம். கடைசி 5 ஓவர்களில் அவர் அதிரடியாக விளையாட கூடிய ஆற்றல் பெற்றவர். இதன் அடிப்படையில்தான் நேற்று தினேஷ் கார்த்திக் பின்னர் களம் இறங்கினார் என்று காரணம் கூறியுள்ளார்.

நேற்றைய ஆட்டம் சற்று மெதுவாக இருந்தது.தினேஷ் கார்த்திக் கூட ஆரம்பத்தில் சற்று பொறுமையாகவே விளையாட ஆரம்பித்தார். எங்களுடைய யூகம் சரிதான் ஆனால் நேற்று அது சரியாக போகவில்லை எனினும் இதை நாங்கள் இதற்கு முன்பு பயன்படுத்தி இருக்கிறோம் இனி வரும் போட்டிகளிலும் இதை பயன்படுத்துவோம். சிறப்பான முடிவு இனி வரும் நாட்களில் கிடைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் ஸ்ரேயாஸ் நம்மிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.