இங்கிலாந்தில் வின்னிங் நாக்.. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அரைசதம் – சாய் சுதர்சன் தொடரும் அதிரடி!

0
2121
Sudarsan

இந்திய கிரிக்கெட் தற்காலத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. நிறைய இளம் திறமைகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மென்ட்கள் இல்லை என்பது ஒரு மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.

- Advertisement -

தற்பொழுது திரும்பி பார்த்தால் இடதுகை இளம் பேட்ஸ்மேன்கள் திலக் வர்மா ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் மற்றும் சாய் சுதர்சன் என திறமையான இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இவர்கள்தான் வருங்கால இந்திய அணியின் பேட்டிங் யூனிட் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இங்கிலாந்து கவுண்டி அணியான சர்ரே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஃபர்ஸ்ட் டிவிஷன் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடருக்காக விளையாட சென்றார்.

இந்த நிலையில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஆடுகளத்தில் சர்ரே அணிக்கு 73, 40 ரன்கள் என இரண்டு இன்னிங்ஸிலும் எடுத்து, அந்த அணி கவுண்டி சாம்பியன்ஷிப் வெல்வதற்கு பேட்டிங்கில் மிக முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இதற்கு அடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு வந்து, தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வரும் இரானி கோப்பை தொடரில் ரெஸ்ட் ஆப் இந்தியன் அணிக்கு துவக்க ஆட்டக்காரராக அரைசதம் அடித்திருக்கிறார்.

உள்நாட்டு டெஸ்ட் தொடர்களில் இரானி கோப்பை ஒன்றாகும். அந்தந்த ரஞ்சி சீசன்களில் கோப்பையை வெல்லும் சாம்பியன் அணி உடன், ரெஸ்ட் ஆப் இந்திய அணி விளையாடும். இந்த போட்டியில் வெல்லக்கூடிய அணிக்கு இரானி கோப்பை வழங்கப்படும்.

இந்த நிலையில் இன்று துவங்கிய இந்த தொடரில் ரெஸ்ட் ஆப் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணிக்கு துவக்க ஆட்டக்காரராக வந்த தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்து, 164 பந்துகளில் ஏழு பவுண்டரிகளுடன் 72 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

வளரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பைத் தொடர், இங்கிலாந்தில் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடர், தற்பொழுது இரானி கோப்பை என்று சாய் சுதர்சன் பேட்டிங்கில் திறமையை மற்றும் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். அவருடைய வயதுக்கு அவர் விளையாடும் விதம் மிக அதிகமாக இருக்கிறது. சாய் சுதர்சன் வெகு சீக்கிரத்தில் இந்திய அணியில் விளையாடினால் அது ஆச்சரியம் இல்லை!