இலங்கையில் ஆடினதுதான் உதவியது.. எனக்கு விராட் கோலி விக்கெட் கிடைத்தது இப்படிதான் – வில்லியம் ரூர்க் பேட்டி

0
65
Virat

நேற்று இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியது எப்படி என நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் வில்லியம் ரூர்க் கூறியிருக்கிறார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி நேற்றில் இல்லாத காரணத்தினால் பேட்டிங் செய்ய மூன்றாவது இடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ரன் ஏதும் எடுக்காமல் நியூசிலாந்து இளம் பந்துவீச்சாளர் வில்லியம் ரூர்க் இடம் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

லெக் ஸ்லிப் திட்டம்

விராட் கோலி விக்கெட் குறித்து பேசி இருக்கும் வில்லியம் ரூர்க் கூறும்பொழுது “என்னுடைய பந்துவீச்சு என்னுடைய கோணத்தில் இருக்கும் பொழுது, அது அவரை லெக் கல்லி திசைக்கு கொண்டு வரும் என்று நினைக்கிறேன். எங்களுடைய தாக்குதல் விருப்பமாக இந்த திட்டம் இருந்தது. அந்தப் பந்து சரியாக இல்லாவிட்டாலும் கூட அதிர்ஷ்டவசமாக எனக்கு விராட் கோலி விக்கெட் கிடைத்தது. இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”

“பெங்களூரு எங்களுடைய நியூசிலாந்து போல நேற்று இருந்தது. நாங்கள் கண்டிஷனில் இவ்வளவு உதவி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை டாஸ் வென்று இருந்தால் நாங்களும் பேட்டிங் செய்து இருப்போம். ஆனால் நாங்கள் பந்து வீசியதும், நான் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதும் மகிழ்ச்சி அளிக்கிறது”

- Advertisement -

இலங்கையில் விளையாடியது உதவியது

மேலும் பேசிய அவர் கூறும் பொழுது “நேற்று களத்தில் நாங்கள் சிறப்பாக இருந்தோம் என்று நினைக்கிறேன். நாங்கள் சில அற்புதமான டைவ் செய்து கேட்ச் எடுத்தோம். கடந்தசில போட்டிகளில் நாங்கள் விரும்பியபடி விளையாட முடியவில்லை. இந்த இங்கு வந்து இப்படி ஒரு போட்டியை நாங்கள் மாற்றி இருப்பது மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கிறது”

இதையும் படிங்க : கம்பீரின் இந்த முடிவுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது.. கோலியை நான் பாதுகாக்கல – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

“இந்திய துணை கண்டத்தில் விளையாடுவது எனக்கு இதுவே முதல்முறை. இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இங்கு வந்து எனக்கு விளையாட பெரிய அளவில் உதவியாக இருந்திருக்கிறது. மேலும் என்னுடைய பந்துவீச்சில் வேலை செய்யவும் உதவியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -