கம்பீரின் இந்த முடிவுகளில் எனக்கு உடன்பாடு கிடையாது.. கோலியை நான் பாதுகாக்கல – தினேஷ் கார்த்திக் விமர்சனம்

0
111
Gambhir

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நேற்று இந்திய வீரர் விராட் கோலி பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் அனுப்பப்பட்டது தவறான முடிவு என தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். பிறகு இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தது. இதில் பேட்டிங் வரிசையில் கில் இல்லாத காரணத்தினால் விராட் கோலி 3-ம் இடத்தில் வந்தார். மேலும் ரன்கள் இல்லாமல் வெளியேறினார்.

- Advertisement -

விராட் கோலியை பாராட்டுகிறேன்

இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது “விராட் கோலி மிகவும் பாராட்டுக்குரியவர். அவர் நினைத்திருந்தால்கே எல் ராகுல் இல்லை சர்ப்ராஸ் கானை மூன்றாவது இடத்தில் போக சொல்லி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லாமல் தானே முன்வந்திருக்கிறார். பயிற்சியாளரிடமும் தானே செல்வதாக அவர் கூறியிருக்கிறார். இது அவருடைய மனநிலையை சொல்கிறது”

“அதே சமயத்தில் முடிவுகள் வெளிவந்த நிலையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தவறாக இருப்பது தெரிகிறது. இருந்த போதிலும் இந்திய அணியில் வீரர்கள் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ள தயாராக இருப்பதும் தெரிகிறது.நான் பயிற்சியாளரின் இந்த முடிவுகளை குறை சொல்லவில்லை. இப்படிப்பட்ட முறையில் அவர் சரியான முடிவுகள் எடுக்கிறார்”

- Advertisement -

கம்பீர் வழியில் நான் செல்லவில்லை

மேலும் பேசிய தினேஷ் கார்த்திக் ” நான் விராட் கோலியை பாதுகாப்பதற்காக சொல்லவில்லை. இதுவரை விளையாடிய வீரர்களில் சிறந்த திறனும் குணமும் கொண்டவர் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் விராட் கோலிக்கு நான்காம் இடம் என்பதுதான் சரி. மற்ற வடிவங்களில் அவர் மற்ற இடங்களில் வருவது பிரச்சனை கிடையாது”

இதையும் படிங்க : இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கதான் விரும்புவாரு.. ஆனா இப்போ அவர நெனச்சாதான் கவலையே – இங்கி நாசர் ஹுசைன் பேட்டி

“கே.எல் ராகுல் பேட்டிங்கில் மூன்றாம் இடத்தில் களமிறங்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். இந்த பேட்டிங் வரிசையில் செல்லும் கம்பீரின் திட்டத்தை நான் பின்பற்ற மாட்டேன். எனவே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது இடத்தில் மட்டுமே களம் இறங்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்

- Advertisement -