எட்டு டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா வெஸ்ட் இண்டீஸ் .. இந்திய அணியை வீழ்த்துவதற்கான மூன்று காரணங்கள்!

0
541

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை டோமினிக்கா தீவில் தொடங்க இருக்கிறது . ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுற்றுக்களில் இந்திய அணி பங்கு பெறும் முதல் டெஸ்ட் தொடர் என்பதால் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது .

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் இந்திய அணி பங்கு பெற இருக்கும் முதல் தொடர் எதுவாகும் அதனால் இந்த தொடரை வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது . மறுபுறம் மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் தோல்வி அடைந்து உலகக்கோப்பையில் பங்குபெறும் வாய்ப்பை முதன்முதலாக இழந்திருக்கிறது

- Advertisement -

இதனால் நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் தொடரை வென்று தங்களது நம்பிக்கையை புதுப்பிக்க அந்த அணி முயற்சிக்கும் . கடந்த எட்டு டெஸ்ட் தொடர்களில் இந்தியா அணி தான் எல்லா தொடர்களையும் வென்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் இந்த முறை சற்று அனுபவம் குறைவான அணியுடனே இந்தியா வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறது . வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடினால் அந்த அணியால் இந்தியாவை வீழ்த்த முடியும் அதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம் .

இந்திய அணியின் அனுபவம் இல்லாத பந்துவீச்சு வரிசை:
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சில் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராக முகம்மது சிராஜ் மட்டுமே இருக்கிறார் . அவரைத் தவிர அணியில் இடம் பெற்றிருக்கும் மற்ற வீரர்களுக்கு சர்வதேச அனுபவம் அவ்வளவாக இல்லை என்றே கூறலாம் . மேலும் கடந்த முறை இந்தியாவின் சுற்றுப்பயணங்களின் போது முகமது சமி மற்றும் பும்ரா இசான் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் பணிகள் இடம் பெற்றிருந்தனர். இந்த முறை பும்ரா காயத்திலிருந்து குணமாகி வருகிறார் மற்றும் முகமது சமி ஓய்வில் இருக்கிறார் . இதனால் இந்திய அணியின் வேகப்பந்து வீசி சற்று பலகீனமானதாகவே இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள்:
மறுபுறம் வெஸ்ட் இண்டீஸ் அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணியின் பந்து வீச்சு வரிசை அனுபவம் வாய்ந்ததாக இருக்கிறது. கிமார் ரோச்,காபிரியல், ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்சாரி ஜோசப் போன்ற அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்களை கொண்டிருக்கிறது . மேலும் ஆடுகளங்கள் மற்றும் அதன் தன்மை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சாதகமாகவே இருக்கிறது . கடந்த காலங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை வென்றிருக்கிறது . மேலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை சமன் செய்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி .

- Advertisement -

இந்திய அணியின் நிலையில்லாத பேட்டிங் வரிசை
இந்திய அணியின் பேட்டிங் வரிசை வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் சமீப காலமாக திணறி வருகிறது . மேலும் புஜாரா அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஜெய்ஸ்வால் மூன்றாவது இடத்தில் களம் இறங்க இருக்கிறார் . இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் அஜிங்கியா ரகானே ஆகியோர் முன்னணி பேட்ஸ்மேன்களாக இருந்தாலும் சமீபகால டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் ரண்களை குவிக்க திணறி வருகின்றனர் . மேலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக விளையாடி வரும் கேஎஸ்.பரத் இதுவரை ஒரு அறை சூதம் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது சுப்மன்கில் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் ஆடுவதைப் போல டெஸ்ட் போட்டிகளில் சரியான ஆட்டங்களை வெளிப்படுத்த தவறி வருகிறார் . எனவே மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் . இந்தக் காரணங்களால் கடந்த எட்டு டெஸ்ட் தொடர்களில் பெற்ற தோல்விக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக விளையாடினால் நிச்சயமாக பதிலடி கொடுக்க முடியும் .