“சதம் அடிச்சா இடம் கிடைச்சிடுமா?.. சாம்சனுக்கு வாய்ப்பு கஷ்டம்தான்.. காரணம் இதான்!” – கம்பீர் பரபரப்பு பேச்சு!

0
441
Sanju

கேரளாவை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட்டில் அறிமுகமாகி மொத்தம் எட்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் இதுவரையில் அவர் விளையாடிய போட்டிகளின் எண்ணிக்கை 39.

வருடத்திற்கு 5 போட்டிகள் கொடுத்திருந்தால் கூட தற்பொழுது அவர் ஒரு போட்டி சேர்த்து விளையாடி இருந்திருப்பார். அவருக்கான வாய்ப்பு என்பது ஒரு தொடருக்கு தரப்பட்டு, அத்தோடு நிறுத்தப்பட்டு விடும். மேலும் வாய்ப்பு தரப்படும் தொடரிலும், அனைத்து போட்டிகளும் விளையாட வைக்கமாட்டார்கள்.

- Advertisement -

இப்படித்தான் சாம்சன் இந்திய அணிக்கு உள்ளே வெளியே என எட்டு வருடங்களாக தொடர்ந்து பந்தாடப்பட்டிருக்கிறார். அதே சமயத்தில் உலகின் மிகப்பெரிய டி20 லீக் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். இந்த அந்தஸ்தில் இருக்கும் ஒரு வீரர் எப்படி இந்திய அணிக்கு வெளியே இருக்க முடியும்? ஆனால் சாம்சன் மட்டும் இருந்தார்.

இதன் காரணமாக சாம்சனுக்கு ஆதரவு வெளியில் பெருக ஆரம்பித்தது. ஆனால் பிசிசிஐ மற்றும் தேர்வுக்குழு எதையும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக சாம்சனை புறக்கணித்து வந்தார்கள்.

இந்த நிலையில் தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிக இக்கட்டான நிலையில், தொடரை தீர்மானிக்கும் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார். இதற்கு மேல் இவருக்கு வாய்ப்புகள் தாராளமாக கிடைக்கும் என்று நினைத்த நேரத்தில், வாய்ப்புகள் இனியும் கஷ்டம்தான் என்பதாகக் கம்பீர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் திறமை என்னவென்பது நமக்கு நன்றாகவே தெரியும். ஐபிஎல் தொடரில் அதை அவர் வெளிப்படுத்தி நாம் பார்த்திருக்கிறோம். தற்பொழுது அவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி, தான் யார் என்பதை நிரூபித்து இருக்கிறார்.

ஆனால் அடுத்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது. இந்த சதத்திற்கு பிறகும் அவருடன் சேர்ந்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இருக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.எதுவும் உறுதி கிடையாது.

சாம்சன் எப்படிப்பட்ட தரமான வீரராக இருக்கிறாரோ தொடர்ந்து அவர் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவருக்கு மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பராக நல்ல வாய்ப்புகள் உண்டு. இந்தியா எப்பொழுதுமே கனமான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும். இதற்கு சாம்சன் நன்றாக வலிமை சேர்ப்பார். இந்தச் சதத்தில் மூலம் அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்!” என்று கூறியிருக்கிறார்!