உலக கோப்பை அணியில் மாற்றம் வருமா?.. அஷ்வினுக்கு வாய்ப்பு உண்டா? – ரோகித் சர்மா பளிச் பதில்!

0
2834
Ashwin

நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டிக்கு கேப்டன் ரோகித் சர்மா அணிக்கு திரும்பி இருக்கிறார்!

இதற்கு முன்பாக கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொண்டார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் மிக முக்கியமான கேள்விகள் அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

மிக முக்கியமாக அவர் கூறும் பொழுது 13 பேர் மட்டுமே தற்பொழுது இந்திய அணியில் கைவசம் இருப்பதாக கூறி இருக்கிறார். மற்றவர்கள் உடல்நலம் இல்லாமலும் சிலர் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்று இருப்பதாகவும் தெரிவித்திருப்பது கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது.

அதே சமயத்தில் இதெல்லாம் எளிதில் தீர்க்கக் கூடிய விஷயம் என்பதாகவே ரோகித் சர்மா பேசியிருக்கிறார். கடந்த 10 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா அணி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

மேலும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி உள்ள ரோகித் சர்மா உலகக் கோப்பை இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து ஓரளவுக்கு வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும்பொழுது
“அவரிடம் கிளாஸ் இருக்கிறது. விளையாட்டை விளையாடி அழுத்தத்தை கையாளும் அனுபவத்தை பெற்றிருக்கிறார். கடந்த ஒரு வருடமாக அவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை.

இப்படி இருந்தாலும் அவரிடம் இருக்கும் தரத்தையும் அனுபவத்தையும் உங்களால் பறிக்க முடியாது. கடந்த இரண்டு ஆட்டங்களில் அவர் எவ்வளவு சிறப்பாக பந்து வீசினார் என்பதை நாங்கள் பார்த்தோம். அவர் கைகளில் நிறைய வேரியேஷன்கள் இருக்கிறது. ஒரு வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், நாங்கள் நிறைய விஷயங்களை பார்க்கலாம்.

இந்த நேரத்தில் எங்களுக்கு விஷயங்கள் எப்படி இருக்கிறது? என்றால் மிக நன்றாக இருக்கிறது. ஏனென்றால் நாங்கள் எல்லா பேக் அப்களையும் தயார் செய்து விட்டோம். நாங்கள் அவர்களுக்கு போதுமான விளையாட்டு நேரத்தையும் மற்றும் நடுவில் ஓய்வையும் கொடுத்திருக்கிறோம். கடந்த இரண்டு வாரங்களில் நடைபெற்ற விஷயங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது.

உலகக் கோப்பை அணியில் மாற்றம் இருக்குமா? என்றால், இன்னும் ஒரு போட்டி மீதம் இருக்கிறது. 28ஆம் தேதி வரை எங்களுக்கு நேரமும் இருக்கிறது. யாருக்கும் காயம் ஏற்படாது என்று நம்புகிறேன். எனவே பொறுத்துப் பார்ப்போம். வீரர்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் ஃபார்ம் உடனும் இருப்பார்கள்!” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்!