சூரியகுமார் தொடர்ந்து இருப்பாரா? அவர் தேவையா? வாய்ப்பு தருவிங்களா? – சந்தேகத்தை தீர்த்து வைத்த ராகுல் டிராவிட்!

0
1478
Surya

இந்திய அணி நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் விளையாடுகிறது!

இந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு இரண்டு இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளுக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இந்த அணியில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கடைசிப் போட்டிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா அணிக்கு திரும்புகிறார். இந்த போட்டியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகிய நட்சத்திர வீரர்கள் வருகிறார்கள்.

மேலும் இந்திய அணிக்கு அக்சர் படேல் காயம் அடைந்திருக்கும் நிலையில் அஸ்வின் உள்ளே வந்திருக்கிறார். மேலும் ருதுராஜுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் திலக் வர்மா அணியில் இருக்கிறார்.

மேலும் துவக்க இடத்தில் சுப்மன் கில் உடன் யார் வருவார்கள்? என்கின்ற சுவாரசியமான கேள்வி இருக்கிறது. ஏனென்றால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் நடு வரிசையில்தான் உலகக் கோப்பையில் விளையாடுவார்கள். எனவே இவர்களில் ஒருவரை மேலே அனுப்பி துவக்க இடத்தில் விளையாட வைப்பதால் எந்தப் பயனும் இல்லை. அதனால் அந்த இடத்தை யாருக்கு தருவார்கள்? என்கின்ற ஒரு கேள்வி இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிரடி வீரர் சூரிய குமாரின் பேட்டிங் சொதப்பல்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவரை நீக்கி அந்த இடத்திற்கு அஸ்வினை உள்ளே கொண்டு வரலாம் என்றும் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது. ஏனென்றால் பேக்கப் பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளே இருக்கிறார்.

இந்த நிலையில் சூரியகுமார் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் கேட்கப்பட்ட பொழுது “நாங்கள் சூரியகுமார் யாதவை முழுமையாக ஆதரிக்கிறோம். அவர் ஒருநாள் போட்டிகளில் தற்போது இருக்கும் நிலையை முழுமையாக மாற்றுவார்.
அவர் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை பெறுவார் என்று நாங்கள் நம்புகிறோம்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது ஏன் என்று பேசிய ராகுல் டிராவிட் ” ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியாக இருக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் விரும்புகிறது. இதன் காரணமாகவே அவர்களுக்கு முதல் இரண்டு போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது!” என்று கூறியிருக்கிறார்!