நேற்று இந்திய அணி நான்காவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அனுப்பிய எதிராக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த வெற்றிக்குப் பிறகு சஞ்சு சாம்சன் தொடர்ந்து இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பாரா? என்பது குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பதிலளித்திருக்கிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளில் ரன் இல்லாமல் ஆட்டம் இழந்தார். மீண்டும் கடைசிப் போட்டியில் நேற்று சதம் அடித்தார். கடைசி ஐந்து டி20 போட்டிகளில் மட்டும் அவர் மூன்று சதங்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை கேப்டனும் ஓபனரும்
தற்போது இந்திய டி20 அணியின் அதிகாரப்பூர்வ துணை கேப்டனாக சுப்மன் கில் இருக்கிறார். அவர் அடுத்தடுத்து டெஸ்ட் தொடர்களில் விளையாடுகின்ற காரணத்தினால் அவருக்கு டி20 இந்தியா அணியிலிருந்து ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் கடைசி ஏழு டி20 போட்டிகளுக்கு தொடக்க ஆட்டக்காரராக சஞ்சு சாம்சனை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பயன்படுத்தியது. இதில் மூன்று போட்டிகளில் அவர் அதிரடியாக சதம் அடித்திருக்கிறார்.
இன்னொரு பக்கத்தில் ஜெய்ஸ்வால் இடது கை ஆட்டக்காரர் மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் வீரர் என்பதால் அவருடைய இடம் துவக்க ஆட்டக்காரராக உறுதியாக இருக்கிறது. தற்பொழுது கில் மற்றும் சாம்சங் இடையேதான் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது யார் இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார்கள்? என்பது பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது.
பெரிய தலைவலியாக இருக்கும்
இது குறித்து பேசி இருப்போம் கேப்டன் சூரியகுமார் கூறும்பொழுது “உலக கோப்பைக்கு முன்பு நாங்கள் சில டி20 போட்டிகள் விளையாடினோம். எப்படியான பிராண்டு கிரிக்கெட் விளையாடுவது என பேசினோம். நாங்கள் ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்காக விளையாடுகிறோம். அதே சமயத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேரும் பொழுது, எங்களுடைய ஐபிஎல் உரிமைகளுக்கு எப்படி விளையாடுகிறோமோ அதே போல அணிக்காகவும் விளையாடுகிறோம்”
இதையும் படிங்க : ஆஸி இந்தியா டெஸ்ட்.. போட்டி அட்டவணைகள்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. தொடங்கும் நேரம்.. முழு விவரம்
“அடுத்து யார் இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள் என்பது குறித்து நான் நீண்ட தூரம் யோசிக்கவில்லை. உண்மையில் இது குறித்து பேச பயிற்சியாளர் உடன் அமரும் பொழுது கடினமாக இருக்கும். உங்களிடம் சிறந்த 20 வீரர்கள் இருந்தால் தேர்ந்தெடுப்பது எப்பொழுதும் பெரிய தலைவலியாகத்தான் இருக்கும். அதே அணியை 15 வீரர்கள் மற்றும் பிளேயிங் லெவன் என சுருக்க வேண்டும்.இது சவாலாக இருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த தலைவலி பிசிசிஐ மற்றும் தேர்வு குழுவுக்கு இருக்கிறது எனக்கு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.