இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 22ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் போட்டி நடைபெறும் நேரம், தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததை அடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறுவது கட்டாயமாக இருக்கிறது.
மேலும் இதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான சூழ்நிலையை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாமல் மற்ற அணிகளின் சூழ்நிலைகளையும் சார்ந்திருக்க வேண்டிய நிலைமையில் இந்திய அணி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் நேரம் மற்றும் நடைபெறும் இடம், தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளனர்.
போட்டி நடைபெறும் நேரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு
முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் 22ம் தேதி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்க உள்ளது. பகல் இரவு போட்டியாக நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6ம் தேதி ஓவலில் உள்ள அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 14ம் தேதி காலை 5.50 மணிக்கு கப்பாவில் உள்ள பிரிஸ்பேனில் தொடங்க உள்ள நிலையில், 4வது டெஸ்ட் போட்டி 26ம் தேதி மெல்போர்னிலும், 5வது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 2ம் தேதி சிட்னியில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் காலை 5 மணிக்கு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரொம்ப கஷ்டமா இருக்கு.. இனிமே இப்படி பவுலிங் பண்ண முடியாது.. அத செஞ்சே ஆகணும் – மார்க்ரம் பேட்டி
இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்ற தகவல் தற்போது வெளிவரும் நிலையில் அவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






