நாளை மறுநாள் தொடங்க இருக்கும் 19ஆவது ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யார் என்று வெளிப்படையாக கேப்டன் ருதுராஜ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு தனிப்பட்ட முறையில் மிக மோசமான தொடராக அமைந்தது. அவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் புள்ளி பட்டியலில் முதல்முறையாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்கள்.
ரூட்டை மாற்றிய சிஎஸ்கே
தற்போது ஐபிஎல் தொடர் அணிகளின் பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான போட்டியாக மாறி உள்ளது. எனவே பந்துவீச்சாளர்கள் மேல் பணம் செலவழிக்காமல் முழுக்க பேட்ஸ்மேன்கள் மேல் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் தற்போது 250 ரன்கள் எடுக்கக்கூடிய அளவுக்கு சிஎஸ்கே பேட்டிங் யூனிட் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எனவே பேட்டிங் வரிசையில் யார் எந்த இடங்களில் இடம்பெறுவார்கள்? என்பது பெரிய சுவாரசியத்துக்கு உரிய கேள்வியாக இருந்து வருகிறது.
ருதுராஜ் பதில்
இந்த நிலையில் அஸ்வின் இது குறித்து பேசும்போது ருதுராஜ் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். இருவரும் நிலையாக நின்று ரன்கள் எடுக்கும் பாரம்பரியம் கொண்டவர்கள், ஒருவர் மென்மையாகவும், ஒருவர் பந்தை கடினமாகவும் அடிக்கக் கூடியவர், எனவே இந்த ஜோடி துவக்க ஆட்டக்காரர்களாக வரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையும் படிங்க : டி20 உலக கோப்பையில் எனது பெயர் இல்லைனு தெரிந்ததும்.. ஹர்திக் பாண்டியா செஞ்ச இதை நான் மறக்க மாட்டேன் – ஜித்தேஷ் சர்மா உருக்கம்
இந்த சூழ்நிலையில் இது குறித்த கேள்வி கேப்டன் ருத்ராஜிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் மிகவும் வெளிப்படையாக “எங்கள் அணியின் ஓபனர்களாக நானும் சஞ்சு சாம்சனும் களம் இறங்க இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.






