ஆர்சிபி-ல் கோலி எனக்கு இதை செய்தார்.. அவர்தான் இந்த விஷயத்தில் பயிற்சி குடுத்தார் – வில் ஜேக்ஸ் பேட்டி

0
79
Virat

நடந்து முடிந்த ஐபிஎல் 17வது சீசனில் ப்ளே ஆப் சுற்றுக்கு நுழைந்து எலிமினேட்டர் போட்டியில் தோற்று ஆர்சிபி அணி வெளியேறியது. எலிமினேட்டர் போட்டியில் இங்கிலாந்து வில் ஜேக்ஸ் ஆர் சி பி அணிக்கு விளையாடாதது பெரிய பின்னடைவாக அமைந்தது. தற்பொழுது அவர் விராட் கோலி உடன் விளையாடியது குறித்து பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வில் ஜேக்ஸ்க்கு ஆர்சிபி அடியில் ஆரம்பத்தில் விளையாடும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவர்கள் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்து மிகச் சிறப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

அவருடைய இந்தச் சதத்தில் பெரிய பங்கு விராட் கோலிக்கு இருந்தது. ஆரம்பத்தில் பந்து எப்படி வருகிறது என்று தெரியாமல் வில் ஜேக்ஸ் தடுமாற்றத்தில் இருந்தார். இப்படியான நேரத்தில் அவரை வழிநடத்திக் கொண்டு, விராட் கோலி ரன் அழுத்தத்தை சிறப்பாக விளையாடி சமாளித்தார். இதன் காரணமாக வில் ஜேக்ஸ் விக்கெட்டை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

தற்பொழுது இதுகுறித்து பேசி இருக்கும் வில் ஜேக்ஸ் கூறும்போது “ஐபிஎல் தொடரில் பெரிய விஷயம் என்னவென்றால், அங்கிருக்கும் மிகப்பெரிய கூட்டம் மற்றும் அந்த சூழ்நிலை, ஒவ்வொரு ஆட்டமும் கொடுக்கும் சந்தர்ப்பம் என மிகப் பெரிய விஷயமாக இருக்கும். களத்திற்கு வெளியே விராட் கோலி பயிற்சிக்காக அணுகும் ஒவ்வொரு விஷயமும், மேலும் அவர் கொண்டிருக்கும் தீவிரமும், அவர் செய்யும் அனைத்தும் 100% கவனத்தை ஈர்க்கக்கூடியது.

அவர் நீண்ட காலமாக இதை செய்து வருகிறார். ஹார்டான யார்டுகளில் அடிக்கடி இதையெல்லாம் செய்ய விரும்பாத ஒரு இளைஞனாக, நான் அவர் செய்து கொண்டிருப்பதை பாராட்ட முடியும். ஆனால் அவரைப் பார்க்கும் பொழுது நாமும் அப்படி செய்ய வேண்டும் என்கின்ற ஆர்வம் உருவாகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ரிஷப் பண்ட்டை பார்த்து பயந்தேன்.. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை – ரிக்கி பாண்டிங் பேச்சு

நாங்கள் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்யும்பொழுது அவர் எனக்கு பயிற்சி அளித்தார். ஒருஇலக்கை எப்படி துரத்துவது? ஆட்டத்தில் ரன் வேகத்தை எப்பொழுது அதிகப்படுத்துவது? என்பது குறித்து நான் பல மதிப்பு மிக்க விஷயங்களை அவரிடம் கற்றுக் கொண்டேன். நான் பார்ட்னர்ஷிப்பில் இருந்த விதம் குறித்து பெருமை கொள்கிறேன். நான் பார்ட்னர்ஷிப்பை உடைக்கவில்லை. மேலும் பேட்டிங்கில் மூன்றாவது இடத்தில் என்னால் என்ன செய்ய முடியும் என்று காட்டி இருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.