ரிஷப் பண்ட்டை பார்த்து பயந்தேன்.. எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை – ரிக்கி பாண்டிங் பேச்சு

0
982
Rishabh

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டார். சாலை விபத்தில் சிக்கிய அவர் மீண்டு வருவாரா? என்கின்ற பேச்சுகள் இருந்த பொழுது, அவருடைய மறுபிரவேசம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தற்பொழுது இது குறித்து டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கேப்டனாகவும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆகவும் செயல்பட்ட ரிஷப் பண்ட் 14 போட்டிகளில் 144 ரன்கள் எடுத்தார். இவருடைய ரன் ஆவரேஜ் 40.54 எனவும், ஸ்ட்ரைக் ரேட் 155 எனவும் மிகச் சிறப்பாக இருக்கிறது. இதேபோல் விக்கெட் கீப்பிங்கில் மொத்தம் 16 டிஸ்மிஷல்கள் செய்திருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் திரும்பி வந்தது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இவர் இல்லாத காலகட்டத்தில் பலருக்கும் விக்கெட் கீப்பிங் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கேஎல்.ராகுல் இதைச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் இறுதியாக துருவ் ஜுரல் கண்டறியப்பட்டார். ஆனால் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இஷான் கிஷான், ஜிதேஷ் சர்மா என வாய்ப்பு தரப்பட்ட யாரும் நிரூபிக்கவில்லை.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் குறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் “நான் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு அவருக்கு விபத்து ஏற்பட்டதற்கு பின்னால் மூன்று நான்கு மாதங்கள் ரிஷப் பண்ட் உடன் செலவிட்டேன். அப்பொழுது அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்பி வருவாரா? என்று நான் உண்மையில் பயந்தேன்.அவர் உடல் மற்றும் மனரீதியாக அடைந்த பாதிப்புகளை பார்த்தேன். அப்போது அவரால் நடக்க முடியவில்லை.

அவருடைய பேட்டிங் பற்றி எங்கள் யாருக்கும் எந்த கவலையும் இல்லை ஏனென்றால் அவர் எவ்வளவு திறமையானவர் என்பது குறித்து தெரியும். ஆனால் அவருடைய விக்கெட் கீப்பிங் குறித்து எங்களுக்கு பெரிய கவலை இருந்தது. ஏனென்றால் ஒரு விக்கெட் கீப்பராக அவர் உட்கார்ந்து எழுந்து கொண்டே இருக்க வேண்டியது மிகவும் முக்கியமான விஷயம்.

- Advertisement -

இதையும் படிங்க : புது பயிற்சியாளரா கம்பீர் வேண்டாம்.. நேரா தோனியை கொண்டு வாங்க – கோலியின் கோச் சிறப்பு பேட்டி

அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பார் என்று நான் நம்ப ஆரம்பித்தேன். இதேபோல் அவர் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்தார். இது மிகவும் அவருக்கு குறிப்பிடத்தக்க ஒரு மறுபிரவேசம். அவர் டி20 உலகக்கோப்பையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.