பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில்.. காயமடைந்த அபிஷேக் ஹர்திக் ஆடுவார்களா? – கோச் மோர்கல் பதில்

0
526
Abhishek

நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டி என்பது காயமடைந்த ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் நாளை பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவார்களா? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதிலளித்திருக்கிறார்.

தற்போது ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் யுஏஇ கண்டிஷன் மிகவும் வெப்பமாக இருக்கிறது. இதன் காரணமாக வீரர்களுக்கு நீர்ச்சத்து மிக வேகமாக குறைகிறது. எனவே அவர்களுக்கு தசைப் பிடிப்பு மற்றும் காயமடையும் வாய்ப்பு மிக அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

காயமடைந்த வீரர்கள்

நேற்றைய போட்டியில் ஒரு ஓவர் மட்டுமே வீசிய ஹர்திக் பாண்டியா உடனடியாக களத்தை விட்டு வெளியேறி விட்டார். இதேபோல பீல்டிங் செய்து கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா இருவரும் காயம் காரணமாக வெளியேறினார்கள். இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதில் அளித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் போது “ஆட்டத்தின் போது ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் சர்மா இருவருக்கும் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதில் ஒரு நாள் கழித்து ஹர்திக் பாண்டியா நிலைமை என்னவென்று முடிவு செய்ய முடியும். ஆனால் இப்போதைக்கு அபிஷேக் ஷர்மா மிகவும் நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை”

- Advertisement -

பயிற்சி கிடையாது

“எங்களுடைய வீரர்கள் ஓய்வு எடுப்பது முக்கியம். அவர்கள் அனைவருக்குமே ஐஸ் குளியல் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. போட்டி முடிந்த உடனேயே அவர்களுக்கு மீட்பு வேலைகள் ஆரம்பித்துவிட்டது. இப்போதைக்கு அவர்கள் ஒரு இரவு நன்றாக தூங்கி எழுவதுதான் சிறந்த விஷயம். அவர்களுக்கு நல்ல ஓய்வு கிடைக்கும்” என நம்புகிறேன்.

இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட்.. நடுவர் அவுட் கொடுக்காதது ஏன்? – வினோதமான கிரிக்கெட் விதி

“சனிக்கிழமை வீரர்களுக்கு நீச்சல் குளம் ஒதுக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மனதளவில் தயாராக அவர்களுக்கு மசாஜ் அமர்வுகள் உண்டு. இது ஒரு விரைவான திருப்பமாக இருக்கும். புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியம். நிச்சயமாக வீரர்களுக்கு எந்த பயிற்சியும் இருக்காது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -