“இந்தியா டைம்-அவுட் மன்கட் சர்ச்சை அவுட்களை செய்யுமா?” – ராகுல் டிராவிட் தெளிவான பதில்!

0
873
Dravid

நடப்பு உலக கோப்பையை சிறந்த செயல் திறன்கள் மட்டுமல்லாது சில முடிவுகளும் சுவாரசியமாக்கி இருக்கிறது. இந்த வகையில் இலங்கை அணியின் மேத்யூஸ் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் டைம் அவுட் முறையில் ஆட்டம் இழந்தது குறிப்பிடத்தக்கது!

பொதுவாக தற்போது கிரிக்கெட் உலகத்தில் கிரிக்கெட் விதிகளை முழுவதுமாக பின்பற்றக்கூடிய அணிகள் மற்றும் வீரர்கள் ஒருபுறமாகவும், ஸ்பிரிட் ஆப் கேம் என்று பேசக்கூடிய ஆட்கள் ஒரு புறம் ஆகவும் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு தரப்பு இன்னொரு தரப்பை குற்றவாளியாக்குகிறது. குறிப்பாக ஸ்பிரிட் ஆஃப் கேம் என்று பேசக்கூடிய ஆட்கள், கிரிக்கெட்டில் இருக்கும் விதிகளை முழுமையாக பயன்படுத்தும் அணி மற்றும் வீரர்களை குற்றம் சுமத்துகிறது.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடம் இந்திய அணி டைம் அவுட் மன்கட் போன்ற சர்ச்சைக்குரிய அவுட் முறைகளை பின்பற்றுமா என்கின்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதுகுறித்து பதில் அளித்துள்ள ராகுல் டிராவிட் ” இதில் நீங்கள் குறிப்பிட்டது போல வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதமாக செயல்படுகிறார்கள். நமக்கென்று சொந்தமாக மனம் மற்றும் சொந்தமாக எண்ணங்கள் இருக்கிறது. நாம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை பற்றி வித்தியாசமாக சிந்திப்போம்.

- Advertisement -

இதில் உண்மையில் சரி தவறு என்று இரண்டுமே கிடையாது. விதிகளை அப்படியே பின்பற்ற வேண்டுமா என்றும் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு சிறிது வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்பதும் பேசுபொருளாக மாறுகிறது.

யாராவது கிரிக்கெட் விதிகளின்படி செயல்பட விரும்பினால், நீங்கள் அவர்களை குற்றவாளி ஆக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் நேர்மையாக விதிகளைத்தான் பின்பற்றுகிறார்.

அதேபோல் ஒருவர் விதிகளை பின்பற்றலாம், ஒருவர் விதிகளை பின்பற்றாமல் இருக்கலாம். ஆனால் நாம் விதிகளை பின்பற்றியதற்காக பின்பற்றாதவர்களை குற்றம் சொல்லக்கூடாது. இது அவரவர் தனிப்பட்ட முடிவு அவ்வளவுதான்!” என்று கூறியிருக்கிறார்!