இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இப்ப எங்க இடத்துல சாதிக்க முடியாது.. 30 ரன்னில் வெளியே அனுப்பிடுவேன் – மிட்சல் மார்ஸ் பேட்டி

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விராட் கோலி சீக்கிரத்தில் அவுட் செய்வேன் என மிட்சல் மார்ச் கொஞ்சம் நகைச்சுவையான முறையில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சமீப காலத்தில் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் விராட் கோலிக்கு வேகத்திற்கு சாதகமான ஆஸ்திரேலியா சூழ்நிலை அவர் திரும்பி வருவதற்கு சரியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இதனலையில் மிட்சல் மார்ஸ் விராட் கோலி ரன் எடுக்க விடமாட்டேன் என தெரிவித்திருக்கிறார்.

பெர்த்தில் விராட் கோலி

மகேந்திர சிங் தோனி விராட் கோலியின் முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் பெர்த் மைதானத்தில் அவர் மிகச் சிறப்பான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தார். ஒருவேளை அவர் அந்த போட்டியில் சிறப்பாக செயல்படவில்லை என்றால் அவர் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஆரம்பத்தில் இருந்தே விராட் கோலிக்கு வேகம் என்பது பிரச்சனையாக இருந்தது கிடையாது. அதை அவர் திறமையாக சமாளித்து விளையாட கூடியவராகவே இதுவரையில் இருந்து வந்திருக்கிறார். எனவே இந்த முறையும் விராட் கோலியை பெர்த் வேகம் அச்சுறுத்தாது என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் சுற்றுப்பயணம் விராட் கோலி மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்புவதற்கு வசதியாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள்.

- Advertisement -

விராட் கோலியை தோளில் தூக்கி சென்று வெளியே விடுவேன்

இந்த நிலையில் மிட்சல் மார்ஸ் விராட் கோலிக்கு எதிரான திட்டம் குறித்து பேசும் பொழுது அவரை களத்தில் வம்பு இழுக்கும் எந்த திட்டமும் இல்லை எனவும், மேலும் பந்தின் மூலமாக அவருக்கு பதில் அளிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் விராட் கோலி குறித்து கூறும் பொழுது அவர் நகைச்சுவையாக பேசியிருக்கிறார்.

இதையும் படிங்க : 25 ரன்.. ஒரே இன்னிங்ஸில் வென்ற தமிழக அணி.. புள்ளி பட்டியலில் முதலிடம்.. ரஞ்சி டிராபி 2024

விராட் கோலி பற்றி மிட்சல் மார்ஸ் கூறும்பொழுது “அவர் 30 ரன் எடுக்கும் பொழுது, நான் அவரை தோளில் சுமந்து சென்று களத்திற்கு வெளியே விட்டு விடுவேன். அவர் அதற்கு மேல் ரன் எடுக்க அனுமதிக்க மாட்டேன்” என நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறார். எப்படியும் ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் ஃபார்மில் இல்லாமல் இருக்கும் விராட் கோலி களத்திற்கு வந்ததுமே அவரை வீழ்த்துவதற்கு அதிரடியான திட்டத்தை கையில் வைத்திருக்கும் என்பது உறுதி!

- Advertisement -
Published by

Recent Posts