இந்திய கிரிக்கெட்

ஆஸி தைரியமிருந்தா இந்திய அணிக்கு எதிரா.. இந்த 2 விஷயத்தை செய்யுங்க – பாகிஸ்தான் பசித் அலி சவால்

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சவால் விடுக்கும் விதமாக கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 1991-92 ஆண்டுக்குப் பிறகு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்தான் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்த முறை பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை நான்கு போட்டியில் இருந்து ஐந்து போட்டிகளாக உயர்த்தி இருக்கிறார்கள்.

மேலும் கடந்த இரண்டு முறையாக ஆஸ்திரேலியா தங்கள் உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை தோற்று இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்குஉள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவது முதல், ஐந்து போட்டிகளையும் எந்தெந்த மைதானத்தில் வரிசைப்படி விளையாடினால் சாதகமாக இருக்கும் என்கின்ற வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் விழிப்புணர்வோடு இருக்கிறது.

இந்த நிலையில் தொடர் ஆரம்பிப்பதற்கு மூன்று மாத காலம் இருக்கும் பொழுதே ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தன்னுடைய மைண்ட் கேமை ஆரம்பித்திருக்கிறார். ஆஸ்திரேலியா அணி இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று என எளிதாக இந்திய அணிக்கு எதிராக கைப்பற்றும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து விமர்சனம் செய்திருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி இந்தியா அணியில் முக்கியமான ஆறு வீரர்கள் இல்லாமல் இருந்தால் மட்டும்தான் ஆஸ்திரேலிய அணியால் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்று கூறியிருந்தார். மேலும் தற்போது இரண்டு முக்கியமான விஷயங்களை இந்திய அணிக்கு எதிராக செய்ய முடியுமா? எனவும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சவால் விடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : இந்திய முன்னாள் வீரர் அதிரடி விமர்சகர்.. கென்யா அணிக்கு புதிய ஹெட் கோச் ஆனார்.. 2003 பொற்காலம் திரும்புமா?

இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “இந்த முறை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான புல் மற்றும் பவுன்ஸ் கொண்ட ஆடுகளத்தை உருவாக்கும் தைரியம் இருக்கிறதா? அதேபோல் டேவிட் வார்னர் இல்லாததால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓபனிங் வரும் ஸ்மித் இந்த முறையும் அப்படியே ஓபனிங் வருவாரா? பலவீனமான அணிகளுக்கு எதிராக ஓபனிங் வந்த ஸ்மித் இப்பொழுது அதை செய்ய முடியுமா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts