இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து இந்தியாவுக்கு பேட்டிங் பிட்ச் தராங்க.. ஆனா எங்க பாகிஸ்தானுக்கு மோசம் பண்றாங்க.. காரணம் இதான் – பஷீத் கான் பேச்சு

​இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கான பிட்ச் தயாரிப்பில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

​பாகிஸ்தான் கிரிக்கெட் டீமின் மோசமான செயல்பாடுகள் குறித்து அந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாசித் கான் பேசிய கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

​இங்கிலாந்து மற்றும் பிற நாடுகள் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்யும்போது மட்டும் ஐந்து நாட்களும் போட்டி நீடிக்கும் வகையில் பிட்ச்சுகளை தயாரிப்பதாக அவர் கடுமையான புகாரை முன்வைத்துள்ளார்.

​இதுகுறித்து பாசித் கான் பேசும்போது “இந்திய அணி இங்கிலாந்திற்கு டெஸ்ட் தொடர் விளையாட செல்லும்போது, அங்கு ஐந்து நாட்களும் போட்டி தொடரும் வகையில் பிட்ச்சுகள் அமைக்கப்படுகின்றன. இந்திய மேட்ச் சீக்கிரமாக முடிந்தால் போர்டின் வருமானத்திற்கு பெரிய இழப்பு ஏற்படும் என்பதால் இவ்வாறு செய்கிறார்கள். மற்ற டீம்கள் சென்றால் போட்டி மூன்று நாட்களிலேயே முடிந்துவிடுகிறது” என்று ஆரம்பித்து “இந்தியா வரும்போது அது பணத்தை ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக மாற்றப்படுகிறது. இது இருதரப்பு தொடர் என்பதால் ஐசிசி இதில் தலையிட முடியாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் இந்த விவகாரம் குறித்து பேசிய அவர் “பிட்ச்சின் இயல்பு திடீரென மாறுவது கிடையாது. இந்தியாவிற்கு எதிரான போட்டிகள் ஐந்து நாட்கள் வரை நீடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே வேண்டுமென்றே பிட்ச்சுகள் அவ்வாறு உருவாக்கப்படுகின்றன. இதனால்தான் மற்ற அணிகள் விளையாடும் போது போட்டிகள் விரைவாக முடிவடைந்து விடுகின்றன” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts