இந்திய முன்னாள் வீரர் அதிரடி விமர்சகர்.. கென்யா அணிக்கு புதிய ஹெட் கோச் ஆனார்.. 2003 பொற்காலம் திரும்புமா?

0
1206
Kenya

சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ஆம் ஆண்டின் காலத்தில் கென்யா கிரிக்கெட் அணி சிறப்பாக வளர்ந்து வந்தது. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் அந்த அணி இருக்கும் இடமே தெரியவில்லை. இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஒருவரை கென்யா கிரிக்கெட் நிர்வாகம் தங்கள் அணிக்குத் தலைமை பயிற்சியாளராக நியமித்திருக்கிறது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கிரிக்கெட் ஒரு காலத்தில் மிகச்சிறப்பான வளர்ச்சியை எட்டியது. தற்போதைய ஆப்கானிஸ்தான் அணி போல அவர்கள் எதிர்பாராத வெற்றிகளை பெற்று எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வந்தார்கள்.

- Advertisement -

கென்யா அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை வரலாற்றில் 1996 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரையில் தகுதி பெற்று வந்தது. இதற்குப் பிறகு அந்த அணியால் உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் அளவிற்கு முன்னேற முடியவில்லை. 2007 ஆம் ஆண்டு மட்டுமே ஒரே ஒருமுறை டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது.

மேலும் 2003 ஆம் ஆண்டு கெண்ணிய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. அந்த வருடம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு கென்யா அணி முன்னேறி இந்தியாவை சந்தித்து தோற்றது.

- Advertisement -

இந்த நிலையில் மீண்டும் கென்யா கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக இந்திய முன்னாள் வீரர் தோட்டா கணேஷ் புதிய தலைமை பயிற்சியாளராக கென்யா அணிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் இந்திய அணிக்கு நான்கு டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் மிதவேக பந்துவீச்சாளராக இருந்து ஆறு சர்வதேச விக்கெட் பற்றி இருக்கிறார்.

உள்நாட்டு கிரிக்கெட்டில் 193 போட்டிகள் விளையாடிய அனுபவம் கொண்டவர். மேலும் இந்திய கிரிக்கெட்டில் ஜெய் சா வரையில் யார் மீதும் பயமில்லாமல் விமர்சனத்தை வைக்கக் கூடியவர். பெரும்பாலும் இவருடைய கிரிக்கெட் விமர்சனங்கள் எல்லாமே தைரியமாகவும் தெளிவாகவும் இருந்திருக்கிறது.

இதையும் படிங்க : உம்ரான் மாலிக் அதுல ஸ்பெஷலா ரெடி ஆகறாரு.. ஆனா நான் அவர்கிட்ட ஒரு விஷயத்தை விரும்பல – இர்பான் பதான் தகவல்

கென்யா அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் டோட்டா கணேஷ் அது குறித்து கூறும் பொழுது “கென்யா அணியை உலக கோப்பைக்கு தகுதி பெற வைப்பது என்னுடைய முதல் நோக்கமாகும். இந்த வீரர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நான் பார்த்திருக்கிறேன். கடந்த காலத்தில் என்ன நடந்தது? என்று நான் பார்க்க விரும்பவில்லை.இந்த வீரர்கள் சாம்பியன் உணர்வைக் கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் விளையாடியதை யூட்யூபில் பார்க்கும் பொழுது இவர்களது திறமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -