நான் இந்த ஐ.பி.எல் அணிக்காக விளையாட விரும்புகிறேன் – பிரபல மேற்கிந்திய தீவுகள் வீரர் ஃபிடல் எட்வார்ட்ஸ்

0
1317
Fidel Edwards

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வேகப்பந்து வீச்சாளர்களுள் முக்கியமானவர் மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பிடல் எட்வர்ட்ஸ். அவருடைய அதிவேக பந்து வீச்சின் மூலம் மிகச் சிறந்த பேட்டிங் வீரர்களையே திணற வைத்து உள்ளார். இதுவரை 55 டெஸ்ட் போட்டிகள் 50 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார். பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடினார். இந்த முறை ஐபிஎல் ஏலத்துக்கு தனது பெயரை பதிவு செய்துள்ள இவர் தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் 2021ஆம் ஆண்டு தனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்ததாகவும் மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு விளையாடியது மகிழ்ச்சிகரமான விஷயம் என்று பேசியுள்ளார். டி10 தொடரில் பங்கேற்று அபுதாபி அணிக்காக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அபுதாபி தனக்கு மிகவும் பிடித்தமான இடம் என்றும் கடைசியாக ஒருமுறை கெயில் உடன் இணைந்து விளையாட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் பற்றிய கேள்விக்கு அவரை தனது நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுவதாக தான் விளையாடியதிலேயே சிறந்த கேப்டன் அவர்தான் என்றும் பேசியுள்ளார். மேலும் மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு இந்த டி20 உலக கோப்பை சரியாக அமையவில்லை என்றும் நிச்சயமாக அடுத்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல் படுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெஸ்ட் ஒருநாள் டி20 என மூன்று விதமான கிரிக்கெட்டுமே சவாலானது தான் என்றும் அவர் பேசியுள்ளார்.

தன்னுடைய பழைய ஐபிஎல் ஞாபகங்கள் குறித்து பேசவில்லை இவர் தன்னுடைய முதல் போட்டி என்றுமே அவர் மனதில் நிலைத்து இருப்பதாகவும் ரோகித் சர்மாவை பார்த்த உடனேயே இவர் சிறப்பான வீரர் என்பதை உணர்ந்து கொண்டதாகவும் பேசியுள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவதில் விருப்பம் தெரிவித்துள்ளார். தான் அவுட்டாக்கிய வீரர்களிலேயே இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சனின் விக்கெட் தனது மிகவும் பிடித்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அனைத்து வீரர்களையும் கொண்டும் சிறந்த அணி ஒன்றை உருவாக்கச் சொல்ல கேள்விக்கு, கெயில், ஹைடன், சச்சின், லாரா, சாபர்ஸ், காலிஸ், வார்னே, மெக்ராத், வாசிம், மார்ஷல், ஆம்ப்ரோஸ் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளார் பிடல் எட்வர்ட்ஸ்

- Advertisement -