“பயிற்சியாளர்னு டீம்ல எதுக்கு இருக்கிங்க?” – டிராவிட் மீது கம்பீர் மீண்டும் தாக்கு!

0
5596
Gambhir

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் சர்மாவும் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டும் பல்வேறு பரிசோதனை முயற்சிகளை பல வீரர்களைக் கொண்டு செய்து ஒரு அணியை உருவாக்கினார்கள். ஆனால் இவர்களின் அணி உருவாக்கம் மற்றும் ஆட்ட அணுகுமுறை இந்த டி20 உலக கோப்பையில் பெரிதாகப் பலனளிக்கவில்லை!

இதனால் இந்திய அணி நிர்வாகம் அடுத்து நடக்கின்ற 50 ஓவர் உலகக் கோப்பைக்கு மட்டுமல்லாமல் அதற்கடுத்து நடக்கின்ற டி20 உலக கோப்பையையும் மனதில் வைத்து தற்பொழுது காய்களை நகர்த்தி வருகிறது!

- Advertisement -

இதன் ஒரு பகுதியாக ஜனவரி மாதம் இலங்கை அணி உடன் நடைபெற இருக்கின்ற டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாகவும் ஒரு நாள் அணிக்கு துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 அணியில் இருந்து ரோஹித் சர்மா கேஎல் ராகுல் விராட் கோலி புவனேஸ்வர் குமார் போன்ற மூத்த வீரர்கள் விலக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதே சமயத்தில் இளம் வீரர்களான இசான் கிஷான், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக் ஆகியோர் அணிக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வரும் துவக்க வீரர் பிருத்வி ஷா க்கு வாய்ப்பு வழங்கப்படாதது விமர்சனமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

தற்பொழுது இது குறித்து தனது காட்டமான கருத்தை இந்திய அணிகள் முன்னாள் துவக்க இடது கை ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் முன் வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசியிருப்பதாவது
” அணியில் பயிற்சியாளர் எதற்காக இருக்கிறார்? தேர்வாளர்கள் எதற்காக இருக்கிறார்கள்? வீரர்களுக்கு பந்து எறிந்து, ஆட்டத்திற்கு தயார் படுத்துவது மட்டும்தான் பயிற்சியாளரின் வேலையா? இவர்கள் இருவரும் பிருத்திவி ஷா போன்ற வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டும். அணிக்குள் கொண்டு வந்து அவர்களை சரியாக வழி நடத்த வேண்டும் ” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” வீரர்களை ஆட்டத்திற்கு தயார்படுத்துவது அணி நிர்வாகத்தின் ஒரு குறிப்பிட்ட வேலைதான் ஆனால் அதுவே முழு நேர வேலை கிடையாது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவில் தங்களது அணிக்கு என்ன தேவை தாங்கள் என்ன அணுகுமுறையில் இருக்கிறோம் என்பதை தேர்வாளர்கள் குழுவுக்கு தெரியப்படுத்தி புரிய வைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கவும் வேண்டும். தேர்வாளர்களும் அணி நிர்வாகத்தில் ஒருவர்தான் என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்” என்று விளாசி இருக்கிறார்!