இன்று யுஏஇ அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் விளையாட வராமல் பாகிஸ்தான் அணி இழுத்தடித்தது. தற்போது இதற்கான காரணங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியிருக்கிறது.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இரண்டாவது சுற்று முன்னேறுவதற்கு பாகிஸ்தான் மற்றும் யுஏஇ இரண்டு அணிகளுக்கும் வாழ்வா சாவா போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி எட்டு மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய போட்டி ஒன்பது மணிக்கு துவங்க இருக்கிறது. இந்த தாமதத்திற்கு பின்னால் இருந்த காரணங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.
பாகிஸ்தான் வைத்த கோரிக்கை
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முடிந்ததும் அந்த அணி வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை கொடுக்க மறுத்து விட்டார்கள். இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் சர்ச்சை உருவானது. இந்திய அணியை தண்டிக்க வேண்டும் என ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டதை ஐசிசி நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் குறிப்பிட்ட போட்டியில் போட்டி நடுவராக இருந்த ஆண்டி பைக்கிராப்டை தொடரில் இருந்து வெளியேற்ற வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் அழுத்தம் கொடுத்தது. இந்த நிலையில் இதற்கும் ஐசிசி பார்த்துவிட்டது. இதன் காரணமாக இன்று ஹோட்டலில் இருந்து போட்டிக்கு புறப்பட்டு மைதானம் வராமல் பாகிஸ்தான் அணி இழுத்தடிக்க ஆரம்பித்தது. இதனால் பாகிஸ்தான் அணி விளையாட வராது எனவும் தொடரை விட்டு வெளியேறுகிறது எனவும் கூறப்பட்டது.
இடையில் நடந்த சமாதானம்
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் மற்றும் முன்னாள் சேர்மேன்கள் பாகிஸ்தானில் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்து, தங்களுடைய அணியை ஹோட்டலில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி மைதானத்திற்கு வரவில்லை. இதனால் போட்டி தாமதப்பட்டது.
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்.. ஐசிசி ரேங்க் பட்டியலில் இந்திய அணி மாஸ் சம்பவம்.. 4 NO1 இடங்கள்.. புதிய சாதனை
இந்த நிலையில் போட்டி நடுவர் ஆண்டி பைக்கிராப்ட் தற்போது மைதானத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார். பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளில் இவர் செயல்பட மாட்டார் என்று தெரிய வருகிறது. இதன் காரணமாக சமாதானமடைந்த பாகிஸ்தான அணி தற்போது மைதானத்திற்கு வந்து போட்டி இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்குகிறது. டிக்கெட் வாங்கியவர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர் ஷிப் என பலருக்கும் பதில் சொல்ல வேண்டி இருந்ததால், கடைசியில் சமாதான முடிவு எட்டப்பட்டிருக்கிறது.






