பும்ரா 4வது டெஸ்டில் விளையாடாதது ஏன்? ராஞ்சி ஆடுகளம் எப்படி?.. உண்மையை உடைத்த இந்திய பேட்டிங் கோச்

0
339
Bumrah

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இரண்டு அணிகளுக்குமான பெரிய வித்தியாசமாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இருந்து வருகிறார்.

நடப்பு தொடருக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை கொடுக்காததை போலவே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையும் கொடுக்கவில்லை. பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் தான் கொடுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இப்படியான ஆடுகளத்தில் தன்னுடைய தனித்திறமையை பயன்படுத்தி இந்தத் தொடரில் அதிகம் விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளராக பும்ரா இருந்து வருகிறார். இவர் கொடுத்த திருப்புமுனைதான் தற்பொழுது இந்தியா தொடரில் முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது. நான்காவது டெஸ்ட் போட்டியை வென்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்கின்ற நிலையில், இந்திய கிரிக்கெட் நிர்வாகம் இப்படியான முடிவை எடுத்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

அதே சமயத்தில் பும்ரா அடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இரண்டு மாத காலம் தொடர்ந்து ஐபிஎல் தொடர் விளையாட வேண்டும். அதற்கு அடுத்து உடனே ஒன்றரை மாதக்காலம் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பும்ரா ஓய்வு குறித்து பேசி உள்ள இந்திய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கூறும் பொழுது “ஒவ்வொரு போட்டியிலும் அவர் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லாத விரும்பத்தகாத ஒன்று. மேலும் அவர் இப்பொழுது உடல் தகுதியில் நன்றாக இருக்கிறார்.

அடுத்து வரவிருக்கும் போட்டி அட்டவணைகள் மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினோம். இதன் அடிப்படையில்தான் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் என்றால் எப்பொழுதும் ஆடுகளம் குறித்து பேச்சுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். தற்பொழுது ராஞ்சி ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.

இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. அதிரடியாக பிளேயிங் XI வெளியிட்ட இங்கிலாந்து.. 2 முக்கிய வீரர்கள் நீக்கம்

ஆனால் இந்த ஆடுகளத்தில் பந்து எப்போது இருந்து திரும்ப ஆரம்பிக்கும்? எப்பொழுது ஆடுகளம் மாறும்? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஆனால் எந்த மாதிரி ஆடுகளம் இருந்தாலும், அதைச் சமாளிக்கக் கூடிய வகையில் அணிக்கலவை சரியாக இருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.