“என்னை மட்டும் ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள்? – இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பற்றி முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் கருத்து!

0
481

ஒரு காலத்தில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பெயர் போன இந்திய அணியில் தற்போது வேகப்பந்துவீச்சாளர்களின் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் இருந்து 2015 ஆம் ஆண்டிற்கான காலகட்டத்தில் இந்திய அணி வெளிநாடு சுற்றுப் பயணங்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது.

அன்று இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ் தோனி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளை ஜெயிப்பதற்கு தொடர்ந்து வேகமாக பந்துகளை வீசக்கூடிய அளவிற்கு வேகப்பந்துவீச்சாளர்களின் உடல் தரம் மேம்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதனை தோனிக்கு பிறகு கேப்டனாக வந்த விராட் கோலி செய்து காட்டினார். இதன் காரணமாக இந்திய அணியில் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் உருவாகினர்.

- Advertisement -

முகமது சமி, ஜஸ்ப்ரீத் பும்ரா. முகமது சிராஜ், உமேஷ் யாதவ் , நவ்தீப் ஷைனி, பிரதீஷ் கிருஷ்ணா, ஆவேஷ் கான் என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு பட்டாளம் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது. ஒரு போட்டிக்கு மூன்று முதல் நான்கு வேகுப்பந்துவீச்சாளர்களை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறும்போது மூன்று பிரதான வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி வந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவத்தை கிரிக்பஸ் இணையதள நிகழ்ச்சியில் பகிர்ந்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் .

அந்த நிகழ்ச்சியில் அவர் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை பற்றி தெரிவித்துள்ளார். உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார் ஆனாலும் முகமது சமி ஜஸ்ப்ரீத் பும்ரா இசாந்த் சர்மா ஆகியோர் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய காலங்களில் உமேஷ் யாதவிற்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததில்லை. விளையாடும் லெவனில் இடம்பெறாத உமேஷ் யாதவ் பயிற்சியாளர் பரத் அருனிடம் வந்து “என்னை ஏன் அணியில் இருந்து நீக்கினீர்கள் நான் என்ன தவறு செய்தேன்”என்று கோபப்பட்டு இருக்கிறார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள பரத் அருண்” அந்த நேரத்தில் அவரது கேள்விக்கு பதில் அளிப்பது எனக்கு மிகவும் கடினமான காரியமாக இருந்தது. உமேஷ் யாதவ் இந்திய அணிக்காக 139 போட்டிகள் வரை ஆடியிருக்கிறார். அவர் சிறப்பாக செயல்படும் இந்திய அணியின் பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டிக்கு தயார் நிலையில் இருக்கும்போது உமேஷ் யாதவை பெஞ்சில் அமர வைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை “
என தெரிவித்தார்.

- Advertisement -

இதுகுறித்து மேலும் பேசிய அவர் ” சில நேரங்களில் அவர் என்னிடம் மிகவும் கோபப்பட்டு ஒரு நாள் வரை பேசாமல் கூட இருப்பார். மறுநாள் என்னிடம் வந்து நான் நிலைமையை புரிந்து கொண்டேன் டீம் காம்பினேசனுக்கு ஏற்றபடி தானே வீரர்களை தேர்வு செய்ய முடியும் என கூறுவார். அவர் ஒரு மிகச் சிறந்த டீம் மேன் என கூறி முடித்தார் பரத் அருண்.